பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ജ് நன. வானமாமலை . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . 55 பெண்ணுரிமைச் சமுதாயத்தோடு போராடி, ஆணுரிமைச் சமுதாயம் தன்னை நிறுவிக்கொண்ட காலம் அது. அடிமைச் சமுதாயத்தின் ஆளும் வர்க்கமே பெண்ணுரிமைச் சமுதாயத்தை அழித்து, பெண்களை அடிமைப்படுத்தியது என்று உறுதியாகக் கூறலாம். தேவர்களுடைய உலகில் கருவிகளைச் செய்தவன் புகழப்பட்டான். தேவர்க்கரசனுடைய தந்தை வில்லை முத்தமிட்டு அதனைப் புகழ்ந்தான். பழைய தடி, கற்கள் போன்ற கருவிகளைவிட அழிவுத்திறன் அதிகம் பெற்ற வில்லை அவன் புகழ்ந்ததற்குக் காரணம், மனிதனுடைய உழைப்பும், அறிவும் புதிய கருவிகளைச் செய்து ஆளும் வர்க்கத்திற்கு அளித்தது என்பதனாலேயே ஆகும். தங்களது யதார்த்த உலகில் நடந்த வரலாற்று நிகழ்ச்சிகளையும் வரலாற்று முற்காலத்தில் நிகழ்ந்ததாகத் தங்கள் கற்பனையில் கருதி ! வந்த நிகழ்ச்சிப் போலிகளையும் புனைகதைப் பாணியில் தேவருலகில் நடை பெற்றதாக, கலை உருவங்களாக மெசபடோமிய மக்கள் படைத்தார்கள். சமூக யதார்த்தம் பற்றி அவ்வச் சமூகத்தாருடைய கலைப் படைப்பாக இல்லாமல் ஒரு சமூகத்தை அழித்து மற்றொரு சமூகத்தை நிறுவியவர்கள் அச்சமூகத்தின் நியாயத் தன்மையை மெய்ப்பிக்கத் தோற்றுவித்த புனைகதைத் தொகுப்பான புராணமே (Legend) எனுமா எலிஷா. பண்டைய எகிப்திய நாகரிகத்தில் கடலில் இருந்து பிறந்த தலைமைக் கடவுளும் அவன் வாயிலிருந்து தோன்றிய இரு கடவுளர்களும் சேர்ந்து உலகைப்படைத்தார்கள். அபாயிஸ் (Apophis) என்ற புராணக்கதை கூறும் இங்கு உலகின் மூலப்பொருள் கடல் தான். கடலில் இருந்து தோன்றிய கடவுள்தான் தெய்வங்களையும், மனிதனையும் படைத்தார். கதை வருமாறு: எந்நாட்டவர்க்கும் இறைவன், தான் உருவானவுடன் தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். “நான்தான் முதலில் உருவானவன். மற்றவையெல்லாம் நான் உருவான பின் தோன்றின. எனது வாயிலிருந்து எண்ணற்ற ஜீவன்கள் வெளிவந்தன. உலகமும், உலகில் வாழ்ந்த ஜீவன்களும் அப்பொழுது