பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

- * * இரண்டாம் பதிப்புக்கான பதிப்புரை "ஆராய்ச்சி” அறிஞர் பேராசிரியர் நா. வானமாமலை மறைந்து 27 ஆண்டுகள் கடந்துவிட்டன. அவர் மறைந்தவுடனேயே 1980ஆம் ஆண்டு பிப்ரவரியில் அவர் வரைந்த கட்டுரைகளில் ஆறு கட்டுரைகளைத் தேர்வு செய்து மானுடவியல், . சமூகவியல் என்னும் இரு பகுதிகளாக ஒரு நூலை என்.சி.பி.எச். வெளியிட்டது. அந்த நூலின் இரண்டாம் பதிப்பு இப்பொழுது வெளியிடப்படுகிறது. பேராசிரியர் நா. வானமாமலை நாட்டாரியலிலும், தமிழ்ச் சமூக வரலாற்றியலிலும் தடம் பதித்தவர். முதன் முதலாகத் தமிழ் ஆய்வில் மார்க்சிய அணுகுமுறையியலைப் பயன்படுத்தி ஆய்வாளர்க்கு தமிழ் அறிஞர் உலகுக்கு வழிகாட்டியவர். மானுடவியல் என்னும் பகுதியில் மூன்று கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அம்மூன்றும் மானுட சமுதாயம் எவ்வாறு பொருள் முதல்வாத அடிப்படையில் மாறி வளர்ந்து வந்துள்ளது, மானுட சமுதாயம் இனக் குழுநிலையில் இருந்தபோது கடவுள்களும் தெய்வங்களும் எவ்வாறு படைக்கப்பெற்றனர் என்பதைத் தெளிவாக எடுத்துச்சொல்லுகின்றன. நாட்டார் வழக்கியல் என்பது கீழ் மக்களுக்கே உரித்தான, தொட்டுப் பார்க்கத்தகாத இழிந்த பழக்க வழக்கம், சிந்தனையோட்டம், 翻『鍵 நெடுங்காலம் ஒதுக்கப்பட்டு வந்தது. ஆனால் ஹென்றி லூயி மார்க்கன் எழுதிய “பண்டைய சமுதாயம்” என்னும் நூலும் அதைத் தொடர்ந்து பிரடெரிக் எங்கல்ஸ் எழுதிய "குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்” என்னும் நூலும் சமூக ஆய்வியலுக்கு அடித்தளமிட்டன. காரல் மார்க்சின் மருமகனான, பால் லபார்க் (Paul Lafargue) முதன் முதலில் பிரெஞ்சு நாட்டில் வழக்காற்றில் இருந்த கிராமியப் பாடல்களையும் கதைகளையும் ஆய்ந்து நூல் எழுதினார். இந்த நூல் இங்கிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் வழக்கத்திலிருந்த பண்டைய இனக்குழுக்கதைகள் பாடல்களை ஆராய்வதற்கு முன்னோடியாக இருந்தது.