பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ക് 57 sifi. Elitsinsiuishingin Eu - --- --- - --- --- - . . . . . . . . . . . . பருவதெய்வங்கள் செத்துப் பிறப்பதாக நம்பி, விழாக்கள் கொண்டாடினார்கள். சூரிய சந்திரர்களைத் தனிக்கடவுள்களாக வணங்கினார்கள். இவர்களனைவரும் பெருந்தெய்வம் என்ற கருத்துத் தோன்றிய பின்னர், கற்பனையில் அவரால் படைக்கப்பட்டவையாகப் பெருந்தெய்வத்திற்குக் கீழ்ப்பட்ட தெய்வங்களாக இணைக்கப்பட்டன. சூரியசந்திரர்கள், பெருந்தெய்வத்தின் நெற்றிக் கண்ணாக மாற்றப்பட்டனர். கண்கள் கதையில் பின்னால் இருதெய்வங்களால் கொண்டுவரப்பட்டதாகவும், அது பூப்பு அடைந்தவுடன் நெற்றியில் இருந்து விழுந்து விட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. இது சூரிய வணக்கத்திற்கும் பெருந்தெய்வ வணக்கத்திற்கும் ஏற்பட்ட முரண்பாடுகளைக் குறிப்பிட்டது. சிறிது காலம் பெருந்தெய்வத்தோடு இணைக்கப்பட்டு பின்னர் பிரித்து வணங்கப்பட்டதை இது குறிப்பிடலாம். தலையில் தீ உமிழும் பாம்பு இருக்கிறதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வேறு தெய்வ வணக்கங்களை ஒரே தெய்வ வணக்கமாக, உருவாக்குகிறபோது ஏற்படும் முரண்பாடுகள், கதையிலும் முரண்பாடுகளைத் தோற்றுவிக்கின்றன. நெற்றிக்கண் தலையில் பாம்பு, சடையில் சந்திரன் முதலிய கூறுகளைக் கொண்ட எகிப்தியப் பெருந்தெய்வம், நம் நாட்டுச் சிவனை ஒத்திருப்பதைக் காணலாம். சிவனுடைய கற்பனைப்படிமத்திற்கும் எகிப்தியப்பெருந்தெய்வகற்பனைப் படிமத்திற்கும் சில ஒற்றுமைகள் இருப்பதைக் காணலாம். சிவனும், பல தெய்வங்களின் இணைப்பான பெருந்தெய்வமே. மூன்று தெய்வங்கள் ஒன்றாக இருப்பதும் அவற்றைப் பெருந்தெய்வமே படைத்தது என்பதும் முக்கியமான ஒறறுமை. நெற்றிக்கண், தலையில் பாம்பு, புத்திரர்களைப் பெண் சக்தியில்லாமலேயே பெற்றது போன்ற செய்திகளிலும் இவ்வொற்றுமையைக் காண்கிறோம். கிரேக்கப் படைப்புக்கதை ஹெலியோடு என்ற நூலில் காணப்படுகிறது. இக்கதையில் நான்கு பகுதிகள் உள்ளன. இதற்கும் மெசபடோமியப் புராணக் கதைக்கும் ஒற்றுமை உள்ளது. ஆயினும் வேற்றுமைகள் இவை வெவ்வேறு கதைகள் என்று காட்டப் போதுமானவையாக உள்ளன. ஆரம்பக் கட்டங்களில் வேற்றுமையை விட ஒற்றுமை அதிகம் உள்ளது.