பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது 5 অঙ্ক கதையின் முற்பகுதியில், குழப்பத்திலிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் உலகமும், வானமும் தோன்றி, வானத்தில் முதல் பரம்பரையான தேவர்கள் தோன்றுவது வரை சொல்லப்படுகிறது. 彭 @ $ s 安 3 经 兹 球 本 邸 参 @ * 受 ° பழங்கதைகளும் பழமொழிகளும் இரண்டாவது பகுதி குரோனாஸ் என்னும் பூமிகுமாரன் தனது தந்தையைக் காயடிக்கும் செயல் கூறப்பட்டுள்ளது. மூன்றாவது பகுதி தந்தையால் விழுங்கப்படுவதினின்று ஜியுஸ் என்னும் கிரேக்க இந்திரன் தப்புகிற செயல் வருணிக்கப்படுகிறது. நான்காவது பகுதி ஜியுஸ்லிக்கும் தேவர்கள் இராட்சசர்களோடு போரிட்டு ஜயிக்கும் நிகழ்ச்சி சொல்லப்படுகிறது. கதை வருமாறு: 1 முதலில் வெட்டவெளி உருவாயிற்று. 2. அகல் இடம் கொண்ட உலகம் தோன்றியது. எல்லோருக்கும் வாழ இடமளிப்பதும், ஈரோஸ் (ஆசை) என்ற அழகிய தேவியும், மற்ற தேவர்களும் வசிப்பதற்கு இடமானதும் தேவன், மனிதன் ஆகியவர்களது புயல் வேகமான ஆசைகளை, தனது குளிர்ந்த மெல்லிய வீச்சால் தணிவிக்கின்ற காற்று தங்குகிற இடமானதுமான உலகம் தோன்றியது (கிரேக்கப் புராணத்தின்படி தேவர்கள் வசிப்பது இவ்வுலகில்தான். மேல் உலகில் அல்ல). இருளில் இருந்தும், வெட்ட வெளியில் இருந்தும் ஒளி தோன்றி இரவும் பகலும் உண்டாயின. பூமி தன்னைப் போன்ற அளவுடைய வானத்தைத் தன்னை மூடிக் கொள்வதற்காகப் படைத்தாள். பிறகு உயர்ந்த மலைகளையும் அவற்றிலிருந்து குதித்து ஓடிவரும் அருவிகளையும் நீரோடைகளையும் சிருஷ்டித்தாள். அவற்றில் தேவர்களுடைய குடியிருப்புகளை அமைத்தாள். அவள் மீது அன்பு செலுத்துவார் யாரும் இல்லை. இதன்பின் வானத்தோடு கூடினாள். இதன் விளைவாகச் சமுத்திரம் தோன்றியது. கடல், நீர்த்தெய்வங்களான கோக்கஸ், ஹைப்பீரியன், இயாயிடஸ், தியோ, பியா (Phea) தெர்மியா, நிமோஸின் (நினைவு) பொன்முடி தரித்த ஃபியே (Phobe) அழகு மிக்க தெடிஸ் ஆகியவர்கள் பிறந்தார்கள். எல்லோருக்கும் கடைசியாக குரோனஸ்