பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ജ് 60 ಇಣ್ பழிவாங்கும் ஆவிகள் தோன்றின. இவற்றிற்கு எரிமியஸ் என்று பெயர். பின்னுகிற கவசங்களையணிந்து நீண்ட வேல்களைத் தாங்கிய அரக்கர்கள் தோன்றினார்கள். அறுத்தெரியப்பட்ட உறுப்பு கடலில் மிதந்து கொண்டிருந்தது. அதிலிருந்து கிளம்பிய நுரையில் இருந்து அழகிய தேவதையொருத்தி தோன்றினாள். அவள் எரித்திரியா வழியாக சைப்ரஸ் வந்து சேர்ந்தாள். சைப்ரஸ் கடற்கரையில் அவள் கரையேறினாள். தேவர்கள் அவளை அப்ரோடைட் என்று பெயரிட்டு அழைத்தனர். அவளது பாங்கியர்களாக உணர்ச்சியும் (Passion) காதலும் (Eros) படைக்கப்பட்டனர். அவளுக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் மகளிரது புன்சிரிப்பு, கவரும் வித்தைகள், மகளிர் தரும் இன்பம், காதல் ஆகியவை. 母 W 年 伞 氰 o ● 莎 乎 G * * ● 9 & ● பழங்கதைகளும் பழமொழிகளும் தனது மக்களை தேவரது தந்தை 'டைகூன் டைடன்கள் (தடியர்கள் -Titans) என்றழைத்தார். ஏனெனில் அவருக்கு அவர்கள் மீது வெறுப்பு இருந்தது. தங்கள் கழுத்துக்கே சுருக்கு போட்டுக் கொண்ட முட்டாள்களாக அவர்களை அவர் கருதினார். அவர்களுடைய கொடுஞ் செயலுக்கு உரிய தண்டனையை அளிக்கக் காத்திருந்தார். 1. பூமியிலிருந்துதான் வானமும், மலைகளும், நதிகளும் தோன்றின. உயிரற்ற அசலப்பொருள்களைப் படைத்தவள் பூமியே. 2. இதன் பின்னர் மனிதர் போன்ற தேவர்கள் படைக்கப்பட்டனர். இப்படைப்புக்கு மனிதப் புணர்ச்சி போன்ற (Anthropomorphic action) மானிட இயல்புச் செயல் தேவையாய் இருந்தது. இவர்கள் தேவர்களும் அசுரர்களும் ஆவர். இவர்களுக்குப் பின் மிகவும் வலிமை வாய்ந்த பேருருவம் பெற்ற இராட்சகர்கள் தோன்றினர். 3. அப்புறம்தான் தந்தை அவர்களது கொடுஞ் செயல்களுக்காக அவர்களைத் தண்டிக்க உறுதி கொண்டார். தாய் அவருடைய வன்முறைச் செயலுக்காக அவரைத் தண்டிக்க தனது மக்களை வேண்டினாள். குரோனஸ் சம்மதித்தான். தந்தையின் உறுப்பை அறுத்தெறிந்தான். இரத்தத்திலிருந்து எரிமியல் என்ற அரக்கர்களும், அப்ரோடைட் என்ற பெண் தெய்வமும் தோன்றினர்.