பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ജ♔ 缅蝠,缸蟹鲑···· 苓 岱 * * * 必 涉 * * @ 波 匈 ° ● * ° * 唤 多 ° * 始 é 61 ಇಣ 4. இக்கதையின் சமூகக் கருத்துக்கள் வருமாறு தாய்மை அல்லது படைப்புச் சக்தி உயிரில்லாத பொருள்களைத் தோற்றுவித்தது. அப்படிப் படைப்பை நிகழ்த்த ஆண்சக்தி தேவையில்லாதிருந்தது. தேவர்களையும் அசுரர்களையும் தோற்றுவிக்க மானிட உருவ இயல்பு அவசியமாயிற்று. மானிட உருவ சக்தி ஆண்மையின் வன்முறையாக மாறிற்று. தனது வழிவந்தோருக்கே கேடு செய்யும் நிலை தோன்றியது. வானத் தந்தையும், பூமித் தாயும் ஏன் பகைத்துக் கொண்டனர்? குரோனஸ் ஏன் தந்தையின் உறுப்பை அறுத்தெறிந்தான்? இந்த வினாக்களுக்கு விடைகாண முயலுவோம். கதையின் துவக்க காலம் தாயுரிமைக் காலம். தாயுரிமைக்கு, தந்தையுரிமை முரண்பட்ட நிலைமையை தந்தை தாயின் கருவினுள் பிறக்க வேண்டிய பேருருவம் அடையப்போகும் சிசுக்களை அடக்கிய செயல் குறிப்பிடும். இதனால் பெண்மை வேதனையடைகிறது. பெண்மை இக்கொடுஞ் செயலை எதிர்த்து தனது மக்களுள் ஒருவனைப் பழி வாங்கச் சொல்லுகிறது. தந்தைக்கெதிராகவே குரோனஸ் செயல் புரியக் காரணம் என்ன? கதை தோன்றிய காலம், தந்தையுரிமை தோற்றமெடுத்த காலம். இவ்வுரிமை திடீரென்று தோன்றிவிடவில்லை, இவ்வுரிமை இனக்குழுக்கள், அரசு தோன்றுகிற வளர்ச்சி நிலையில் அமைதியாகத் தந்தை - மகன் என்ற உரிமையாகத் தோன்றிவிடவில்லை என்பதை கிரேக்க புராணக் கதைகளும் எகிப்திய புராணக் கதைகளும் காட்டுகின்றன. அரசபதவி, குருபதவியினின்றும் தோன்றியது. காலப்போக்கில் இரு பதவிகளும் இணைக்கப்பட்டு, ஒருவரே இரு பதவிகளையும் வகித்தார். இப்பதவிகள் இணைந்த காலத்தில் ஆயுள் கால முழுவதும் இவ்விரு பதவிகளையும் ஒருவர் வகிக்க முடியாது. முதலில் சில ஆண்டுகள் ஒருவர் பதவி வகித்த பின்னர், அவரைத் தெய்வங்களுக்குப் பலியிட்டு வேறொருவனைத் தேர்ந்தெடுப்பார்கள். அவன் அரச பரம்பரையாக இருக்க வேண்டுமென்பதில்லை. அவன் இனக்குழுவில் திறமை பெற்றவனாக இருக்கவேண்டும். எனவே ஆளும் வர்க்கம் உருவாகு முன்னர், தனிச் சொத்துரிமை தோன்றுமுன் சமூக அமைப்பின் காரணமாகத் தோன்றிய சமூகச் சடங்கு வழக்கமாக இது இருந்தது.