பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Aiః 6 . . . . . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் ಇಣ பின்னர் தனிச்சொத்துரிமையும் வர்க்கங்களும் தோன்றின. ஆளும் வர்க்கத்தின் தலைமைப்பதவியை தனது வம்சத்துக்குள்ளேயே நிலைநிறுத்திக் கொள்ள ஆளும் பதவியில் இருப்பவன் ஆசைப்பட்டான். இதனால் பழக்கமும், சடங்கும் மாற்றப்பட்டன. சில வருஷங்களுக்குப் பின்னர் கொல்லப்பட வேண்டிய அரசன் சடங்கு பூர்வமாகக் கொல்லப்பட்டு, மீண்டும் பதவியிலேயே நீடித்தான். எகிப்தில் இவ்வழக்கம் எப்படி மாற்றமடைந்தது என்று காண்போம். எகிப்திய மன்னர்களான பாரோவாக்கள் 12 ஆண்டுக்கு ஒரு முறை ஒரு நாள் பதவியிலிருந்து இறக்கப்படுவார்கள். யாராவது ஒருவனை ஒருநாள் அரசனாக்குவார்கள். அவன் ஒரு நாள் அரியணை ஏறுவான். மறுநாள் அவனைப் பலியிடுவார்கள். பழைய அரசன் மீண்டும் சிங்காதனம் ஏறுவான். மீண்டும் பன்னிரண்டு ஆண்டுகள் அவன் பதவி வகிப்பான். மீண்டும் சடங்குப்பலிக்கு ஒருவன் தேர்ந்தெடுக்கப்படுவான். மீண்டும் பலி; மீண்டும் பழைய அரசன் பதவியேற்பான். அரசன் இறந்து போனால் ஒருநாள் வேறு ஒருவனை அரச பதவியில் அமர்த்திப் பலியிடுவார்கள். அரசனது மக்கள் யாராவது ஒருவன் அரசனாகத் தேர்ந்தெடுக்கப் படுவான். இம்முறை எகிப்தில் கிறிஸ்துவிற்கு முன் சில நூற்றாண்டுகளில் நிகழ் முறையாக இருந்தது. அரச பதவிக்கு அரசனது மகன் வரவேண்டும் என்ற ஆசை, தந்தைக்கு விரோதமாக மகனை நிறுத்தியது. மகன் தந்தையைக் கொல்லவோ, மீண்டும் மக்களைப் பெற சக்தியற்றவனாகச் செய்யவோ முயன்ற வரலாற்றுப் போக்கையே, குரோனஸ் வானத் தந்தை பகைமை காட்டுகிறது. உடல்வலிமைமிக்க அரக்கர்கள் ஒரேதந்தையிடம்தோன்றியதாகக் கருதப்பட்ட பல்வேறு இனமக்களே. இந்த வேறுபாட்டை புராணம் இரண்டு மூன்றுவகையாகக் குறிப்பிடுகிறது. நூறு கைகொண்டவர்கள் ஒற்றை கண்ணர்கள், பளபளப்பான உலோகக் கவசங்களும், உலோக ஈட்டிகளும் கொண்டவர்கள் என அவர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர். கடைசியில் தோன்றியவர்கள் உலோக ஆயுதங்களைப் பயன்படுத்தியவர்கள். அப்ரோடைட்டின் தோற்றம் புராணப் பாணியில் கூறப்பட்டுள்ளது. இது தந்தை உரிமைக்கும், தாயுரிமைக்கும் இடையே நடந்த போரில்