பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi பின் புதிய சிந்தனையையும் அணுகுமுறையையும் தோற்றுவித்தது. பிரிட்டிஷ் தீவுகளிலும் - ஸ்காட்லாந்திலும் வாழ்ந்த பழங்குடி மக்களிடை வழங்கிய நாட்டுப்புற இலக்கியங்கள் ஆடல் பாடல்கள் பற்றியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வாளர்களில் பெரும்பாலானவர்கள் சோஷலிஸ்டுகள் ஆவார்கள். எனவே மக்களிலக்கியத்தின் சிறப்புப் பகுதியாக வளரத் தொடங்கியது. இந்திய நாட்டளவில், வரணத்தில் இலக்கியத்தில் சிறந்த, உயர்ந்த பங்களிப்பது நாட்டார் வழக்கியல் என்பதனை எடுத்துக்காட்டியதோடு, நாட்டாரியலில் அக்கறை செலுத்தியவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இலங்கிய பி.சி. ஜோஷி ஆவார். ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்துடன் அவர் கொண்டிருந்த தொடர்பு இதற்குச் சாதகமான பின்னணியை உருவாக்கித் தந்தது. தமிழகத்தில் கி. வா. ஜகந்நாதனும், அன்னகாமுவும் கிராமியப் பாடல்களைத் தொகுக்கத் தலைப்பட்டனர். தொகுப்புப் பணியில் ஈடுபட்ட ஆங்கிலேயரும் உண்டு. அடுத்து பேராசிரியர் நா. வானமாமலை நாட்டுப் புறப்பாடல்களை அரிதின் முயன்று முறையாகத் தொகுத்து வெளியிட்டதோடு பல்கலைக்கழக உயர்மட்டத்தில் நாட்டார் வழக்காற்றியலுக்கு இடம்பெற்றுத் தந்த ஆராய்ச்சிப் பெருமகனாவார் என்பது நினைவுகூரத்தக்கது. நாட்டுப்புறப் பாடல்கள் மக்களுடைய வாழ்வின் எல்லா நிலைகள் - பிறப்பு உழைப்பு, பயிர்த்தொழில், கைத்தொழில், திருமணம், சடங்கு, மரிப்பு ஆகிய எல்லா நிலைகளிலும் மக்களை ஆட்படுத்தி வசப்படுத்துவனவாகும். எனவேதான் இவை ஊர்ப்புற மக்கள் வாழ்வில் சிறப்பிடம் பெறுகின்றன. பெரும்பாலான நாட்டுப்புறக் கதைகள் சமுதாய மாற்றங்களைக் குறிப்பாகத் தாய் தலைமை நீங்கித் தந்தை தலைமை அதாவது, பெண்டிரை அடிமைப்படுத்தி ஆடவன் எவ்வாறு எழுச்சி பெற்றான் என்ற சமுதாய நிலை மாற்றத்தை எடுத்துச்சொல்லுவன. பேராசிரியர் நா. வானமாமலை இம்மாற்றத்தைமிகத்தெளிவாகஎடுத்துவிளக்கிச்சொல்வதுபாராட்டுக்குரியது. நாடு விடுதலை பெற்றபின் தமிழகத்தில் மானுடவியல், இனவியல், மொழியியல் பற்றிய ஆய்வுகள் மிகச்சிறப்பாக நடைபெற்றுவந்துள்ளன. அவற்றில் முதலிடம் பெறுவன இவரது கட்டுரைகள். வேதகாலமே பொற்காலம், சங்க காலமே பொற்காலம் என்ற முழக்கங்களுக்கு நேர் எதிராக வரலாற்றில் பொற்காலம் என்பது ஏதும்