பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது 68 . . . . . . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் இது உலோக காலப் பண்டைய மனிதனது வாழ்க்கையிலிருந்தும் அவன் செய்த இரும்புக் கருவிகளில் இருந்தும் மனித விடுதலை கிடைக்கிறது என்பதைக் குறிப்பிடும். கிரேக்க தெய்வம் ஹிராக்ளீஸ், இந்திய தெய்வம் முருகன் ஆகிய இரும்புத் தோற்றகாலத்தின் கடவுள்களது செயல்களோடு இதை ஒப்பிடலாம். பாறைகளைப் பிளப்பதும் அதற்காக ஈட்டிகளைப் பயன்படுத்துவதும் மனிதர்களை விடுதலை செய்வதும் இவ்விரட்டையர்கள் உலகப் பண்பாட்டு வீரர்கள் படிமத்தில் உருவாக்கப்பட்ட கற்பனைகள் (imaginarymodelsofcultural hero). இக்கதையின் முழு வடிவம் இரும்புத் தோற்ற காலத்தின் துவக்கத்தில் பூரணமடைந்தது என்று கொள்ளலாம். 1. கதையின் முன்னுரைப்பகுதி இடைச் செருகலாயிருக்க வேண்டும். 2. இரண்டாவது பகுதி மானிட உருவச் செயல்களால் உலகம் படைக்கப்பட்டது. 3. மூன்றாவது பகுதி புணர்படைப்பு (Recreation) அறிவுள்ள ஒரு மனிதனது தோற்றம். அவனது வேண்டு கோளால் இரட்டையர்கள் பிறந்தார்கள். உலோக காலத்தின் அறிவு வளர்ச்சியால் இருளில் கிடந்த மக்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். முதற்பகுதி உலோக முற்காலப்படைப்பு. இரண்டாவது பகுதி, விலங்குப் பிராயமான மக்களில், மனிதப் பிராயமான அறிவாளி தோன்றுவது. அவன் மக்களை விடுதலை செய்ய வேண்டுவது பின்னர் இரட்டையர் பிறப்பு. மூன்றாம் பகுதி இரும்புக் கருவிகளால் வலிமை பெற்ற மனிதன் இருளில் கிடந்த மனிதனை விடுதலை செய்வது ஆகிய வளர்ச்சிப் பரிணாம கட்டங்கள். புனைகதை (Myth) வளர்கதைப் பாணியில் (legend) மயோரி மக்களிடையே கிறிஸ்தவப் பாதிரிமார் வருகைக்கு முன் வழங்கி வந்திருக்க வேண்டும். அவர்கள் தங்கள் படைப்புக் கதையின் ஓர் அம்சத்தை கதையின் முன்னுரைப்பகுதியில் புகுத்தியிருக்க வேண்டும்.