பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

頸部。磁惡靈留砸破}。。。。。。。。。。。。。。。。。,,,。。。。。。。 இதனை மெர்ஸிடிஸ், எலியாடிஸ் என்ற புனைகதைகளின் பதிப்பாசிரியரே ஒப்புக்கொள்ளுகிறார். ரிக்வேத காலத்திலிருந்து, உபநிஷத காலம் வரை வளர்ந்து மாறிய படைப்புப் பற்றிய கருத்துக்களை புனைகதைகளில் இருந்து அறியலாம். இவற்றுள் ரிக்வேதக் கதை மிக முந்தியது. அதற்குப் பிந்தியது புருஷசூக்தம். உபநிஷதக் கதைகள் ரிக்வேத படைப்புகளுக்கும் காலத்தால் பிந்தியவை. ரிக்வேத காலத்தில் ஆரியர் மாடு பராமரிக்கும் இனக்குழுக்களாக வாழ்ந்தனர். நிலையான வாழ்க்கையில்லாமல் மாடு மேய்க்கிற திரியும் வாழ்க்கை நிலையில் அவர்களிருந்தனர். இவர்கள் வேட்டைக்கால சமுதாயங்களைவிட நாகரிகத்தில் முன்னேறியவர்கள். ஆயினும் நிலைத்த வாழ்க்கையில்லாதவர்களாதலால் இவர்கள் இயற்கைச் சக்திகளுடைய ஆதிக்கத்திற்கு உட்பட்டவர்களாகவே இருந்தார்கள். இவர்கள் தந்தையுரிமை முறையைப் பின்பற்றியவர்கள். மாடு மேய்க்கும் இனக் குழுக்களில் ஆண்தான் சமூக நிலைப்புக்குத் தேவையான மாடுகளை வசக்கி அவற்றின் பாலையும், ஊனையும் பெற்றான். மிகச் சிறிதளவுதான் அவர்கள் பயிர்த்தொழில் செய்தார்கள் (ரிக்வேத காலத்தில்). பயிர்த்தொழில் வளர்ச்சி ஏற்படாததால் அவர்களுடைய பெண்களுக்குச் சமுதாயத்தின் பொருளாதாரத்தில் மிகுதியான பங்கு இல்லை. எனவே அவர்கள் ஆணாதிக்கத்தைத் தங்கள் சமுதாய வாழ்க்கையில் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். வேட்டைகாலச் சமுதாய மக்களைவிட வளர்ச்சியடைந்த சிந்தனையை ரிக்வேதக் கதையில் காண முடிகிறது." 1. வெறுமை கூட அக்காலத்தில் இல்லை வானமும் காற்றும் விண்ணில் இல்லை. எது எதனை மூடியிருந்தது? எங்கிருந்தது? யாருடைய கையில் இருந்தது? ஆழம் அறிய முடியாத இடத்தில் நீர் இருந்ததா? 2. அழிவும் அழிவின்மையும் அப்போது இல்லை. இரவு பகல் என்ற காலப் பிரிவுகள் இல்லை. ஒன்று காற்றில்லாமல், தன்னைத் தான் நிறுத்திக் கொண்டு இருந்தது. -