பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

చ్ర 74 . . . . . . 8 8 # 4 צו ל 2 מ א பழங்கதைகளும் பழமொழிகளும் ళిఖి முட்டைக் கதையை விடச் சிந்தனை வளர்ச்சியடைந்த நிலையில் இக்கதை உள்ளது. ஆனால் இரண்டாவது கதை போல தத்துவச் சிந்தனை இக்கதையில் இல்லை. சாங்கிய தத்துவத்தின் படைப்புக் கருத்தை மாற்றும் நோக்கத்தோடு புனையப்பட்ட இரண்டாவது உபநிஷதக் கதையில் காணப்படும் தத்துவச் சிந்தனை இக்கதையில் இல்லை. நாராயணன் படைப்புக் கதையிலும் ஆணாதிக்கக் கருத்து வன்மையாகக் காணப்படுகிறது. பிரபஞ்ச முழுவதிலும் முதல் ஆணினின்றும் தோன்றியதாக இக்கதைகள் கூறுகின்றன. புருஷன் என்ற கருத்து ஆரியசமுதாயம் வளர்ச்சியடைந்து நான்கு வகைகளாகப் பிரிந்த பின்னர், அதனை நியாயப்படுத்த எழுந்த கதை. புருஷனைப் பலி கொடுத்து, உலகப்படைப்பு நிகழ்ந்ததாகக் கதை கூறுகிறது. “புருஷன் உணவால் பெருக்கமுற்றிருக்கிறான். முக்கால் பங்கு புருஷன் மேலே போய் விட்டான். கால் பங்கு இங்கே இருக்கிறான். உணவால் பெருகிய புருஷன் முக்கால் பங்கு தெய்வத்தன்மையும் கால் பங்கு மனிதத் தன்மையுடையவனாகக் கருதப்பட்டான். அவனை பலியிட அவர்கள் இருந்தார்கள். “அவர்கள்”தேவர்கள். இயற்கையினின்றும் ஏதாவது பெற வேண்டுமானால் பலிகொடுப்பது, சடங்கு செய்வது என்ற மந்திரச்சடங்குகளைச் செய்வது அக்கால மக்களின் நம்பிக்கை மரபாக இருந்தது. எனவே பலி கொடுத்து சூரியன், சந்திரன் முதலிய கோளங்களும்,பிராமணர், சைத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற சமூகப் பிரிவுகளும் தோன்றின என்று கதைசொல்கிறது. இதற்குப் பின் தோன்றியது நாராயணன் கதை. இதுவும் ஆணாதிக்கக் கருத்தின் விளைவாகத் தோன்றியதே. விஷ்ணு வேதத்தில் சிறு தெய்வம். வேதத்தில் இந்திரன், மித்திரன், வருணன், வாயு போல நாராயணன், முக்கியமான தெய்வமாகக் கருதப்படவில்லை. அழிவைத்தரும் தெய்வங்களே சக்திவாய்ந்த தெய்வங்களாக வேத காலத்தில் போற்றப்பட்டன. விஷ்ணு, நாராயணன் அழிவைத் தடுக்கும் தெய்வம். மக்களைக் காப்பாற்றுகிற தெய்வம். விலங்கு பராமரிப்போர் விவசாயம் செய்வோராக மாறும் நிலையில் அழிவைத் தடுக்கும் பயிர்களைப் பாதுகாக்கும் தெய்வங்களுக்குப் பெருமை உண்டாயிற்று. ஆரியர்களுக்கு முன்பே, வேட்டைச் சமுதாயம், விலங்கு பராமரிக்கும் சமுதாயம் ஆகிய நிலைகளைக் கடந்து விவசாய நிலை எய்திவிட்ட