பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . . . . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் உயிர் பெற்றான். அவனது எலும்பை உருவி, அதன்மேல் மண்ணைச் சேர்த்துப் பெண்னைப் படைத்தார். அவள்தான் ஏவாள். இஸ்ரவேலர்கள் ஆரியர்களைப் போலவே விலங்கு பராமரிக்கும் குழுக்களாக வாழ்ந்தவர்கள். இவர்களது குழுக்கள் ஒன்று சேர்ந்து ஒரே நாடாக உருவாகிற நிலைமையைத்தான் பழைய ஏற்பாட்டுக் கதைகள் பிரதிபலிக்கின்றன. ஒரே ராஜ்யமாக, ஒரே அரசனின் கீழ் திரண்டு, ரோம சாம்ராஜ்யத்தை எதிர்க்கிற போது, சிறு தெய்வங்களை {இனக்குழுத் தெய்வங்களை எதிர்த்துப் போராடி ஒரே தெய்வ வணக்கத்தால் தம்மை இணைத்துக்கொண்டார்கள். இந்நிலையில் தந்தையே முக்கியத்துவம் பெறுகிறார். என்வே பெண்ணில்லாமலே உலகத்தை ஆண் கடவுள் படைத்து விடுகிறார். மனித இனத்தில் முதலில் படைக்கப்பட்டவன் ஆண். பின்னர் அவன் எலும்பிலிருந்து படைக்கப்பட்டவள் பெண். இப்படைப்புக் கதைகளில் மூலாதாரச் சிந்தனைகள் ஐந்து வகைப்பட்டவை. 1. உலகம் சில சக்திகளின் செயலால், ஒரு படைப்பவன் இன்றியே பரிணாமம் அடைந்தது. 2. இவ்வுலகம் ஒரு பெண்ணால் படைக்கப்பட்டது. 3. இவ்வுலகம் ஒரு ஆனால் படைக்கப்பட்டது. 4. இவ்வுலகம் ஒரு பகுதி பெண்ணாலும் ஒரு பகுதி ஆணாலும் படைக்கப்பட்டது. 5. பெண்ணால் படைக்கப்பட்ட உலகம் பின் சக்தி வாய்ந்த தேவர்களால் அழிக்கப்பட்டு ஒழுங்காக மீண்டும் அமைக்கப்பட்டது. இவ்வாறு பண்டைய சமுதாய வளர்ச்சி நிலை அல்லது மாறும் நிலையில் படைப்புக் கதைக் கற்பனைகள் மக்கள் உள்ளங்களில் தோன்றியுள்ளன. - மனிதன் குரங்கு நிலையிலிருந்து மனித நிலைக்கு மாறப்பல்லாயிரம் ஆண்டுகள் பிடித்தன. மனித நிலைக்கு மாறிய பின்னர் அவன் உயிரியல் செயல்களைச் செய்தது மட்டுமின்றி, தன்