பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

aఫ్రీ நா. பானமாமலை . . . . . . . . . . . . . . . . . . . . . 等 恕 ° 始 9 ° 77 - வாழ்க்கைக்குத் தேவையானவற்றைத் தன் முயற்சியாலேயே தேடத் தொடங்கினான். இவ்வுழைப்புச் சிந்தனையைத் தோற்றுவித்தது. நேராக இயற்கையைக் கண்டான். இயற்கையிலிருந்தே தனக்குத் தேவையான அனைத்தையும் பெறவேண்டும் என்றும் கண்டான். அப்பொழுது இயல்பியல் கருத்துக்கள் அவன் மனதில் தோன்றின. அதனால்தான் சாங்கிய பரிணாமம் போன்ற கருத்துக்களாலும், பஞ்சபூதக் கருத்துக்களாலும் உலகப் படைப்பை விளக்க முற்பட்டான். பின்னர் கருவிகளைப் படைத்து, உணவையும் தேவைப்பொருள்களையும் உற்பத்தி செய்யத் தொடங்கினான். சமுதாயம் வளர்ந்தது. வேலைப் பிரிவினைகளை சமுதாயத்தில் ஏற்படுத்திக்கொண்டான். இந்நிலையையே புருஷ சூக்தக் கதையும், மர்டாக் கதையும், ஹெஸியோடு கதையும் பிரதிபலிக்கின்றன. உற்பத்தி சக்திகள் வளர்ந்தன. தாயுரிமை தந்தையுரிமைப்போராட்டங்கள் நடந்தன. முடிவில், தனிச்சொத்துடைமை ஆணாதிக்கத்தில் வந்தது. மனிதக் கற்பனையும் உலகப் படைப்பாளியை ஆணாகவே கண்டது. தாய் வழி, தந்தை வழி இவற்றுள் எது எப்பொழுது ஏற்றம் பெறுகிறது என்பதைப் பற்றி இந்திய மார்க்சீய தத்துவ பேராசிரியர் தேவி சட்டோபாத்யாயா கூறுவதாவது: "ஆண் பெண் உயர்வு தாழ்வுகளுக்குக் காரணம் பொருளாதார வாழ்க்கையின் வளர்ச்சியே. வேட்டைக்கு ஈட்டியைப் பயன்படுத்திய காலம் மிக முக்கியமானது. வேட்டை வளர்ச்சி பெற்றபோது ஆண்களுக்குச் சமூகத்தில் உயர்வு ஏற்பட்டது. வேட்டைச் சமுதாயம் ஆடு மாடு வளர்ப்பு சமுதாயமாக மாறிய பின் பெண்ணுக்கு சமுதாயத்தில் உயர்வு ஏற்பட்டது. அதனால் தாய்வழி உரிமை மீண்டும் அவர்களிடையே தோன்றியது. காளைகள் இழுக்கும் கலப்பையைப் பயன்படுத்தி நிலத்தை உழும் பயிர்த்தொழில் தோன்றிய பின் தாயுரிமை முற்றிலும் மறைந்துவிட்டது. ஆயினும் அதன் எச்சங்களைத் தந்தையுரிமைச் சமுதாயத்தில் காணலாம். “தேவர்களும், தேவிகளும் மனித உருவில் மனித சிந்தனையால் படைக்கப்பட்டவர்களே. ஆண், பெண் இருபாலரின் தராதர உயர்வுகள் மாறின. வேட்டை, ஆடு மாடு வளர்த்தல் ஆகிய தொழில்களை அடிப்படையாகக் கொண்ட சமுதாயங்களில் மக்களால் வணங்கப்பட்ட