பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இது 78 ફૂ છુ. ૩ ક્રૂ ડ્રા છ છ દ જે ના & ૪ ? જે છ જે பழங்கதைகளும் பழமொழிகளும் தெய்வங்கள் ஆண்களாகவே இருந்தன. ஆரம்பகால விவசாய சமுதாயங்களில் பெண் தெய்வங்களே ஏற்றம் பெற்றன. இவ்வாறு சமுதாய மாற்றங்களால் ஏற்பட்ட சிந்தனை மாற்றங்களால் படைப்புக் கதைகளிலும் படைப்பாளிகள் ஆண் அல்லது பெண்ணாக இருப்பதைக் காணலாம். மேலே உதாரணங்களாகக் காட்டிய மிகப்பழைய வரலாற்று முற்காலக் கதை மூலங்கள் இவ்வுண்மையை விளக்குகின்றன. இவ்வாறு சமுதாய வளர்ச்சி நிலைகளின் புறவய யதார்த்தம், அவ்வச் சமுதாயத்தில் மக்கள் உள்ளங்களில் இவ்வுலகம் தோன்றிய விதத்தைச் சிந்தனை செய்வதைப் பாதித்தது. படைப்புக் கதைகள், ஒரு சமுதாய நிலை தோன்றிய பின்னரே, அச்சமுதாயத்தின் மக்களால் படைக்கப்பட்டன. ஒரு சிந்தனைப் படிவம் தோன்றிய பின்னர், அச்சிந்தனைப் படிவமே வளர்ச்சி பெறுகிறது. சமுதாய மாற்றங்கள், துவக்கச் சிந்தனைப் படிவத்தை தனது செல்வாக்கால் மாற்றுகின்றன. ஒவ்வொரு சமுதாயத்தின் படைப்புக் கதைகளின் கற்பனைகள், அச்சமுதாயம் வரலாற்றுப் போக்கில் உருவாக்கியுள்ள கற்பனைப் படைப்புப் படிமங்களையும், சமுதாய வளர்ச்சியால் ஏற்படும் புதிய சிந்தனைப் படிமங்களையும் இணைத்து வளர்த்துக்கொண்டு போகிறது. சமுதாய வளர்ச்சி தேங்கிய குழுக்கள், பண்டைய காலத்தில் படைத்த படைப்புக் கதைகளையே நம்புகிறார்கள். வளர்ச்சி பெற்ற சமுதாயங்கள், வளர்ச்சிக்கேற்ற புது அம்சங்களை படைப்புக் கதைகளில் சேர்த்துக் கொண்டே வருகின்றன. சுரண்டல் சமுதாய அமைப்புப் புரட்சியால் மாற்றப்படும்பொழுது, புனைகதைகளுக்கு சமூக அடிப்படையே இல்லாமல் போய்விடும். கற்பனைப் புனை கதைகளைப் படைக்க அவசியமில்லாதபடி விஞ்ஞானமே எல்லாக் கேள்விகளுக்கும் விடையளிக்கும்.