பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்தெய்வ வணக்கத்தின் சமூக அடிப்படைகள் தெய்வங்கள், வழிபடுவோரின் வாழ்க்கை முறையில் இருந்து எழுகின்றன. ஒரு சமுதாயம் அதன் உணவு, உடை, உறையுள் ஆகிய புறவாழ்க்கைத் தேவைகளை எந்த முறையில் பெறுகிறதோ, அதற்காக எத்தகைய சமுதாய அமைப்பை உருவாக்கிக் கொண்டுள்ளதோ, அந்த அமைப்பின் அடிப்படையின் மீது தெய்வநம்பிக்கை என்ற மேற்கோப்பு எழும் (எங்கல்ஸ்). நாகரிக முற்கால வாழ்க்கையை மூன்று கால கட்டங்ககளாக கார்டன் சைல்டு என்ற புகழ் பெற்ற தொல்பொருள் துறை அறிஞர் பகுத்துள்ளார். இது வாழ்க்கையின் துவக்க காலம். 1. மனிதர்கள் உணவு தேடித் திரிந்த காலம் வேட்டையாடியும், கனி கிழங்குகளைப் பொறுக்கியும் தோண்டியும் பெற்ற காலம் இவ்வாறுதான் மனித வாழ்க்கை முதலில் தொடங்கியது. இதை வேட்டைக் காலம் என்று அவர் அழைக்கிறார். 2. கால்நடை வளர்ப்புக் காலம் ஆடு, மாடு, எருமை, ஒட்டகம், குதிரை முதலிய விலங்குகளை உயிரோடு கொணர்ந்து பழக்கி வளர்த்த காலம். 3. புராதன விவசாயம் செய்து உணவின் ஒரு பகுதியைப் பெற்ற காலம் இக்கால மக்கள் கற்கருவிகளைப் பயன்படுத்தியவர்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். கல்லெறிந்தும், கவண் மூலம் கல்லைக்