பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

颂 网 必 心 w ö { % % 姆 * W @ 砂 吹 % பழங்கதைகளும் பழமொழிகளும் சக்தியுடையவர்கள் எனக் கருதப்பட்ட சக்திகள் தெய்வங்களாகப் போற்றப்பட்டனர். தெய்வங்கள் விலங்குகளோடு தொடர்பு படுத்தப்பட்டன. இயற்கைப் பொருள்கள் வானத்துப் பொருள்கள் அவர்கள் உள்ளங்களில் பெருமதிப்புப் பெற்றன. கிரேக்க, இந்திய, சுமேரிய நாகரிகங்களில் வானக்கடவுள் முக்கியமான தெய்வமாயிற்று (Sky God-The Supreme god of Vedic Hindus and Iranians), goshiji சமூக வாழ்க்கையில் முதலில் வருணனும், பின்னர் இந்திரனும் புகழ்பெற்றனர். வருணன் வலையைத் தனது கருவியாகக் கொண்டிருந்தான். இந்திரன் எலும்பினாலான வஜ்ராயுதத்தைப் பயன்படுத்தினான். இவர்களில் எவரும் உலோகங்களினால் செய்யப்பட்ட கருவிகளைப் பயன்படுத்தவில்லை. பிற்காலப் புராணங்கள் வேல், ஈட்டி, அம்பு முதலிய இரும்புக் கருவிகளைப் பயன்படுத்தியதாகக் கூறுகின்றன. ஆரியருடைய தெய்வங்கள், கால்நடை வளர்ப்புக் காலத்தில் அவர்கள் சிந்துசமவெளியை அடைந்த காலத்தில் அவர்கள் கொண்டு வந்தவை. அதற்கு முன்னர் அவர்கள் ஈரானிலும், மத்திய ஆசியாவிலும் வசித்த காலத்தில் அவர்களால் வணங்கப்பட்ட தெய்வங்கள் குறித்து வேதங்களில் கூறப்படவில்லை. வேதங்களில் குறிக்கப்படும் தெய்வங்களில் சில காலத்டை வளர்ப்புக் காலத்துக்கு முந்தியவை ஆகலாம். புராதன விவசாயக் காலத்தில் அவர்கள் புற உலக வாழ்க்கைக்குப் பூமியே முக்கியமானது. செழிப்புத் தெய்வங்களும், மந்திரச் சடங்குகளும் பூமியின் செழிப்புத் திறனை மிகுதியாக்கக் கற்பனை செய்யப்பட்டு உருவாக்கப்பட்டன. செழிப்புத்திறன் பெண்களுக்கே உண்டு என்ற நம்பிக்கை தோன்றிற்று. பெண்கள்தான் முதலில் வேட்டைத் தொழிலில் இருந்து பிரிந்து விவசாயத்தைச் செய்ய ஆரம்பித்தனர். பூமியின் விதையைச் செடியாக வளர்க்கும் திறனுக்கும் குழந்தையைப் பெறும் சக்திக்கும் தொடர்பு உண்டு என்று புராதன விவசாயத்தில் ஈடுபட்ட மக்கள் நம்பினர். எனவே விவசாய மந்திரச் சடங்குகளில் பெண்களே பங்குகொண்டனர். மரத்தில் காய்கனிகள் செழிப்பாக வளருவதற்கு என்ன செய்யவேண்டும் என்பது பெண்களுக்குத் தெரியும். ஏனெனில் அவர்களுக்குக் குழந்தையைப் பெறத் தெரிகிறது. பிள்ளை பெறத் தெரியாதவர்களுக்கு மரங்களையும் செழிப்படையச் செய்ய முடியாது. கருவுற்றிருக்கும் பெண் விதை