பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

జీప్తే, ត្. ត្រឹះស » ... « » « » » ... . . . . . . 帕 0 悠 部 的 * 妙 磁 % * $ 数 ° 83 ಇಟ್ಟಣ விதைத்தால், அவை ஒன்று நூறாக பல்கும். இது தொத்து மந்திரமுறை என்று மானிடவியலாளரால் அழைக்கப்படும் (Contagious magic). பூமியை உயிருள்ள, உயிரில்லாத அனைத்திற்கும் தாய் என்று அவர்கள் கருதினர். தத்துவச் சிந்தனை வளர்ச்சி பெற்ற காலத்தில் பூமி, பிற உலகங்கள் எல்லாம் ஒரே ஜகன் மாதாவிலிருந்து தோன்றின என்று நினைத்தனர். இவ்வாறு தாய்த் தெய்வம் மக்கள் உள்ளத்தில் தோற்றமெடுத்தது. செழிப்புத் தெய்வங்களும் தோன்றின. ஸ்டார் பிரச் கூறுகிறார்: 1. "தெய்வங்களில் பெண் தெய்வங்கள் உயர்ந்த ஸ்தானத்தில் வைத்து வணங்கப்பட்டன. பெண்ணுக்குச் சமுதாய வாழ்க்கையில் எவ்வித ஸ்தானம் இருக்கிறதோ, அதன் அடிப்படையிலேயே பெண் தெய்வங்களுக்கும் மதிப்போ, அவமதிப்போ இருக்கும். இனக்குழு வாழ்க்கையில், குலத்தில் (clan) பெண்ணே, தாயாகவும் தலைவியாகவும் இருக்கிறாள். இந்த நிலையில் சமுதாயத்தில் தாய்த்தெய்வம் எல்லாத் தெய்வங்களுக்கும் மேலாகத் தலைமை பெறுகிறது. ஆண் தெய்வங்களைவிட, பெண் தெய்வம் உயர்ந்த ஸ்தானத்தைப் பெறுகிறது”. 2. "வேட்டை முற்காலச் சொத்து பெண் வழியில் இறங்கியதால் பெண்களுக்குச் சமுதாயத்தில் உயர்ந்த மதிப்பு இருந்தது.” இரண்டாவதாகக் கூறப்படும் பகுதி உண்மையாக இருக்க முடியாது. வேட்டை முற்கால சமுதாயத்தில் மிகவும் புராதனமான கற்கருவிகளே இனக்குழுக்களுக்குச் சொந்தமாயிருந்தன. அவை குழு முழுவதற்கும் சொந்தமாயிருந்தன. ஆண், பெண் என்ற பிரிவினையின்றி, அவை குழுவிற்கு உரிமையாயின. விவசாயம் துவங்கிய பின்னர்தான் நிலம் சொத்தாயிற்று. அது பல்வேறு விதங்களில் பொதுவுடைமையாயிருந்தது. வேட்டைக் காலத்திலேயே இனக் குழுவினுள் வேலைப் பிரிவினை ஏற்பட்டது. பெண்கள் தாவர உணவு தேடுவதிலும், ஆண்கள் வேட்டையாடுவதிலும் ஈடுபட்டிருக்கவேண்டும். தற்கால இனக்குழு வாழ்க்கையிலும், வேட்டைக்கால வளர்ச்சி நிலையிலுள்ள உணவு தேடும் மக்களைக் காண்கிறோம். அவர்களிடமும் ஆண்-பெண் வேலைப் பிரிவினை காணப்படுகிறது. இது போன்றே பண்டைய