பக்கம்:பழங்கதைகளும், பழமொழிகளும்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தி: ※ e 84 . . . . . . . . . . . . . . பழங்கதைகளும் பழமொழிகளும் জুক্ত வேட்டைக் காலத்தில் இயற்கையாகத் துவங்கிய தாவர உணவு தேடுகிற வேலைப்பிரிவினை, பெண்கள் தாவரங்கள் பற்றிய அனுபவ அறிவு பெறும் வாய்ப்பை அளித்தது. அவர்கள் விவசாயத்தில் ஈடுபடத் தொடங்கினர். வேட்டை மூலம் கிடைக்கும் மாமிச உணவைவிட, நம்பத்தகுந்த விளைச்சலை பெண்கள் உற்பத்தி செய்தார்கள். எனவேதான் உலக முழுவதிலும் செழிப்பைக் குறிக்கும் தெய்வங்கள் பெண் தெய்வங்களாகவே இருக்கின்றன. பூமியும் பெண் தெய்வமாகவே கருதப்படுகிறாள். கல்லினால் செய்யப்பட்ட குத்துக்கோல் பின்னர் சூலாயுதமாக மாறிற்று. உலோக காலத்தில் செம்பினால் செய்யப்பட்ட சூலாயுதம் விவசாயக் கருவியாகப் பயன்பட்டது. வேட்டைக் கருவியாக இருந்த கருவிகளே, விவசாயத்திலும் பயன்பட்டன. ஒரே கருவி கொண்டு விவசாயமும் செய்தார்கள், வேட்டையும் ஆடினார்கள். இக்கருவியே இன்றும் உழவர் மக்களிடையே தெய்வத்தைக் குறிக்கும் அறிகுறியாய் உள்ளது. மிகவும் தாழ்ந்த சாதியாருடைய கோயில்களில் சூலாயுதத்தையே வணங்குகிறார்கள். இதுவே முற்காலத்தில் பெண் தெய்வங்களின் போர் ஆயுதமாகவும் கருதப்பட்டது. 'சூலி என்ற சொல் சூலாயுதத்தை உடையவள் என்றும் சூல் கொண்டவள் என்றும் பொருள்படும். உலகைச் சூல் கொண்டு பெற்றவள் என்று அவளைக் கருதுகிறார்கள். சில கோயில்களில் பொந்தந்தடி என்ற வேட்டைக் கருவியை வணங்குகிறார்கள். இவ்வாறு பெண் தெய்வங்கள் உலகப் படைப்புக்குக் காரணமான மூலதெய்வமாகக் கருதப்பட்டதற்குக்காரணம், பெண்கள் விவசாயத்தின் மூலம் சமூக ஆதிக்கம் பெற்றிருந்ததுதான். தோட்ட விவசாயத்தில் உழைப்பை ஈடுபடுத்திய பெண்கள், தானிய உற்பத்தியில் உழைப்பைச் செலுத்தத் தொடங்கினர். இக்காலத்தில் பெண்களின் உழைப்பினால் கிடைத்த உணவு, ஆண்களின் தொழிலான வேட்டையிலிருந்து கிடைத்த உணவைவிட மிக அதிகமாயிருந்தது. சமூகத்தின் உணவுத் தேவையைப்பூர்த்திசெய்வதில் பெண்கள் உழைப்பு பிரதானமாக இருந்ததால் பெண்களுக்கு சமூக மதிப்பு உயர்ந்தது. இந்த சமூக மதிப்பின் வெளிப்பாடாக சக்தி வாய்ந்த தெய்வங்கள் பெண் தெய்வங்களாகவே இருந்தன. மூலதெய்வம் பெண் தெய்வமாகவே இருந்தது.