பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களுக்குக் குறிஞ்சி என்றும் சிறுகுடி என்றும் பெயர். இங்கு வாழ்ந்த மக்கள் குறவர் என்றும் குன்றவர் என்றும் இறவுளர் என்றும் அழைக்கப்பட்டார்கள். இறவுளர் என்பவர் இக் காலத்தில் இருளர் என்று கூறப்படுகின்றனர். இங்குச் சுனை நீர் உண்டு, மலையருவிகளும் உண்டு. பொதுவாக அருவிகள் வேனில் காலத்தில் வறண்டுவிடும். எக்காலமும் ஓடிக் கொண்டிருக்கிற அருவிகள் மிகச் சிலவே. மலைப்பாறைகளுக்கிடையே செடி, கொடி மரங்கள் உண்டு. குறிஞ்சிச் செடிகளும் காந்தன் செடிகளும் குறிப்பிடத்தக்கவை. மூங்கிற் புதர்கள் உண்டு . வேங்கை , திமிசு , தேக்கு, சந்தனம், அகில், கடம்பு, கருங் காலி முதலான மரங்கள் வளர்ந்தன. பறவைகளில் மயிலும் கிளியும் குறிப்பிடத்தக்கவை. புலி, யானை, சிறுத்தைப்புலி, கரடி ,காட்டுப்பன்றி, குரங்கு முதலான மிருகங்கள் இருந்தன.

மலைகளிலும் மலைச் சாரல்களிலும், ஐவன நெல்லையும், தினை என்றும் அரிசியையும் பயிர் செய்தார்கள், மரம் செடி கொடிகளை வெட்டி அப்புறப்படுத்தி வேர்களைக் கிளறிக் கொத்தி நிலத்தைப் பண்படுத்தினார்கள். பயண்படுத்திய நிலத்தை ஏரிநால் உழாமல் பாண்வெட்டியால் கொத்திக் கிளறி ஐவன நெல்லையும் தினையையும் பாசிர் செய்தார்கள். இவை வானம் பார்த்த பயிர்கள், பெரும்பா: ம் மழையை எதிர்பார்த்துப் பயிரிடப்பட்டவை.

மலையுச்சியிலுள்ள பாறைகளில் மலைத்தேன் கிடைக் தது. வள்ளிக் கிழங்கு பயிராயிற்று. பலா மரங்களிலே பலாப் பழங்கள் கிடைத்தன. யானைகளையும் காட்டுப்பன்றி சுளையும் வேட்டையாடினார்கள். தேளை மூங்கிற் குழாய்களில் ஊற்றிப் பதப்படுத்தி ஒருவதை பதுவை உண்டாக்கினார்கள். தினையரிசியிலிருந்தும் மதுபானம் 200க்கினார்கள், மிகத் தாழ்வான சிறிய குடில்களைக் கட்டி அதன் மேல் தினைத் தாளையும் ஐவன நெல்லின் தாளையும் பிரபாக வேய்ந்த குடில்களில் வசித்தார்கள். இவர்களுடைய வாழ்க்கை கடின வாழ்க்கையாக இருந்தது. இவர்களுடைய உணவு உற்பத்தி போதுமானவையன்று, பற்றாக்குறையாகவே இருந்தது. மலைத் தேன், யானைத் தந்தம், புலித்தோல், அகில், கட்டை ,

7