பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'பொலந்தொடி தின்ற மர்வார் முன்பாக
வலம்புரி வளையொடு கடிகைநூல் யாத்து'

(நெடுநெல்வாடை, 141-142)

என்று நெடுநெல்வாடை கூறுகின்றது. காவிரிப்பூம்பட்டினத்திலே பேர்போன செல்வச் சீமானாக இருந்த மாநாய்கான் மகளான கண்ணகியும் வலம்புரிச் சங்கு அணிந்திருந்தாள். மதுரையில் கோவலனை இழந்து கைம் பெண் ஆனபோது கண்ணகி தன் கைகளில் அணிந்திருந்த சங்கு வளையைக் கொற்றவைக் கோயிலின் முன்பு தகர்த்து உடைத்தாள் என்று சிலப்பதிகாரம் கூறுகின்றது. 'கொற்றவை வாயிலில் பொற்றொடி தகர்த்து' (கட்டுரைக் காதை, 181) (பொற்றொடி-பொலிவினையுடைய சங்கவளை. அரும்பத உரை).

மணமகன், தான் மணக்க இருக்கும் மணமகளுக்குச் சங்குவளை கொடுப்பது அக்காலத்து வழக்கம். சங்குவளை அணியும் வழக்கம் தமிழகத்தில் மட்டுமல்லாமல், பாரத நாடு முழுவதிலும் அக்காலத்தில் இருந்தது. இற்றைக்கு 3000 ஆண்டுகளுக்கு முன்னே சிந்து வெளியில் இருந்த ஹரப்பா நகரத்துத் திராவிட நாகரிக மகளிரும் சங்கு வளைகளை அணிந்திருந்தனர் என்பது அங்கு அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக் கூடுகளுடன் சங்கு வளைகளும் இருந்ததனால் அறிகிறோம்.[1] கொற்கை காவிரிப்பூம்பட்டினம் உறையூர் முதலான ஊர்களில் நிலத்தை அகழ்ந்தெடுத்தபோது அங்கிருந்து கிடைத்த பழம் பொருள்களுடன் உடைந்து போன சங்கு வளையல் துண்டுகளும் கிடைத்தன. இதல், சங்க செய்யுட்களில் கூறப்படுகிற அக்காலத்து மகளிர் சங்குவளைகளை அணிந்திருந்தனர் என்னும் செய்தி வலியுறுகின்றது.

சங்கு முழங்குவது மங்கலமாகக் கருதப்பட்டது. கோயில்களிலும் அரண்மனைகளிலும் சங்கு ஊதுவது வழக்கம். அரண்மனைகளிலே காலை வேளையில் முரசு கொட்டியும் சங்கு முழங்கியும் அரசரைத் துயிலெழுப்பினார்கள், அரண்மனைகளில் வலம்புரிச் சங்கு காலையில் முழங்கியதை,

'தூக்கணங் குரீஇத் தூங்கு கூடேய்ப்ப
ஒருசிறைக் கொஇய திரிவாய் வலம்புரி'


  1. (P.86 Ancient India, No 3 Jan 1947)

127