பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூறப்படுகின்றான் (மதுரை, 134-138). ,

கொற்கைக் கடலில் மீன் பிடிக்கும்போது மீனுடன் முத்துச் சிப்பியும் கிடைத்தனவாம். மீன் பிடிப்போர் அச்சிப்பிகளைக் கொண்டுபோய் கள்ளுக் கடையில் கொடுத்து அதற்கு மாறாகக் கள்ளை வாங்கியுண்டனர்.

'பன்மீன் கொள்பவர் முகந்த சிப்பி
நாரரி நறவின் மகிழ்நொடைக் கூட்டும்
பேரிசைக் கொற்கை'

(அரம், 296: 8-10)

பழயர் மகளிர் கொற்கைக் கடலில் கடல் தெய்வத்தை வணங்கிய போது முத்தையும் வலம்புரிச் சங்கையும் கடலில் இட்டு வணங்கினராம்.

'பாண்டியன்
புகழ்மலி சிறப்பின் கொற்கை முன்றுறை
அவிர்கதிர் முத்தமொடு வலம்புரி சொரிந்து
தழையணிப் பொலிந்த கோடேந்தல்குல்
பழயர் மகளிர் பனித்துறை பரவ'

(அகம், 201: 4-7)

ஒருவன் குதிரை மேல் அமர்ந்து கடற்கரை யோரமாகச் சென்றபோது குதிரையின் குளம்புகளில் முத்துக்கள் தட்டுப் பட்டனவாம்.

'இவர் திரை தந்த ஈர்ங்கதிர் முத்தம்
கவர்நடைப் புரவிக் கால்வடுத் தபுக்கும்
நற்றேர் வழுதி கொற்கை முன்றுறை'

(அகம், 130: 9-11)

உப்பு வாணிகப் பெண்கள் கொற்கைக் கடற்கரைக்கு வந்து உப்பு வாங்கின போது அவர்கள் வளர்த்த குரங்குகளும் அவர்களின் சிறுவர்களும் கிளிஞ்சில்களின் உள்ளே முத்துக் களையிட்டுக் கிலி கிலியாடினார்களாம்!

'நோன்பகட் டுமணர் ஒழுகையொடு வந்த
மகாஅர் அன்ன மந்தி மடவோர்
நகாஅர் அன்ன நளிநீர் முத்தம்

130