பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நீலக்கல்

கொங்கு நாட்டிலே சங்க காலத்தில் விலையுயர்ந்த மணிக்கற்கள் கிடைத்தன. சங்கச் செய்யுட்களில் அந்த மணிகள் கூறப்படுகின்றன. கொங்கு நாட்டில் கதிர்மணி கிடைத்ததைக் கபிலர் கூறுகின்றார்.

'இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடு'

(7 ஆம் பத்து, 6; 19-20)

அரிசில் கிழாரும் அங்குக் கிடைத்த திருமணியைக் கூறுகிறார். உழவர் ஏர் உழுதபொழுது அந்த மணிகள் வெளிப்பட்டனவாம்,

'கருவி வானத் தண்டளி சொரிந்தெனாப்
பல்விதை யுழவர் சில்லே ராளர்
பனித்துறைப் பகன்றைப் பாங்குடைத் தெரியல்
கழுவுறு கலிங்கம் கடுப்பச் சூடி
இலங்குகதிர்த் திருமணி பெறூஉம்
அகன்கண் வைப்பின் நாடு'

(8 ஆம் பத்து , 6: 10-15)

கொங்கு நாடு , சங்க காலத்தில், வடக்கே மைசூர் வரையில் இருந்தது. கன்னட நாட்டில் பாய்கிற காவிரி யாறு வரையில் கொங்கு நாடு அக்காலத்தில் பரவியிருந்தது. அந்த வடகொங்கு நாட்டிலே புன்னாடு என்னும் ஒரு பகுதியில் அக்காலத்தில் கோமேதகச் சுரங்கம் இருந்தது. புன்னாட்டின் தலைநகரம் கட்டூர். அது கப்பணி ஆற்றின் கரை மேல் இருந்தது. கப்பணி ஆறு, காவிரியில் கலக்கிற உப நதிகளில் ஒன்று. கப்பணி ஆற்றின் கரைமேல் இருந்த கட்டூர், பிற்காலத்தில் கிட்டூர் என்று வழங்கப்பட்டது. அது பிற்காலத்தில் கிட்டிபுரம் என்றும் பிறகு தீர்த்திபுரம் என்றும் வழங்கப்பட்டது. கட்டூர் அல்லது கிட்டூரைத் தலைநகரமாகக் கொண்ட புன்னாட்டை அக்காலத்தில் குறுநில மன்னன் ஆண்டு வந்தான்.

நவமணிகளில் கோமேதம் என்பது ஒருவகை. கோமேதகங்களில் பல வகையுண்டு, நீலம், பச்சை, மஞ்சள்,

135