பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'நள்ளிருள் விடியல் பன்ளெழப் போகிப்
புலிக்குரல் மத்தம் ஒலிப்ப வாங்கி
ஆம்பி வான்முகை யன்ன கூம்புமுகிழ்
உறையமை தீந்தயிர் கலக்கி நுரைதெரிந்து
புகர்வாய்க் குழிசி பூஞ்காட்டு இரீஇ
நான் மோர் மாறும் நான்மா மேனிச்
சிறுகுழை துயல்வரும் காதில் பணைத்தோள்
குறுநெறிக் கொண்ட கூந்தல் ஆய்மகள்
அளவிலை உணவில் கிளையுடன் அருத்தி'

என்று (பெரும்பாண், 155 - 163) அவர் கூறுகிருர்.

(நுரை - வெண்ணெய்; அளை - மோர் ; மாறும் - பண்ட மாற்று செய்யும் ; கிளையுடன் - சுற்றத்தாரை; அருத்தி - உண்பித்து)

ஆனால் , இடைச்சியர் நெய்யைப் பண்டமாற்று செய்யாமல் காசுக்கு விற்று அக்காசுகளைச் சேமித்து வைத்தார் கள். குறிப்பிட்ட தொகை காசு சேர்ந்தபோது அக்காசைக் கொடுத்துப் பசுவையும் எருமையையும் விலைக்கு வாங்கினார்கள் என்று இந்தப் புலவரே கூறுகிறார்,

'நெய்விலைக் கட்டிப் பசும்பொன் கொள்வாள்
எருமை நல்லான் கருநாகு பெறு உம்
மடிவாய்க் கோவலர்.'

(பெரும்பாண், 164-166)

(விலைக்கு அட்டி-விலைக்காக அளந்து; பசும்பொன் கொள்ளாள்-நெய் விலையாகவுள்ள காசைப் பெறாமல் அவர்களிடத்திலேயே சேமித்து வைத்து; நல்லான் - பசு ; நாகு-பெண் எருமை)

வேடன் தான் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் இறைச்சியை உழவனிடத்தில் கொடுத்து அதற்கு ஈடாக நெல்லை மாற்றிக் கொண்டதைக் கோவூர் கிழார் கூறுகிறார். இடைச்சியரும் உழவனுக்குத் தயிரைக் கொடுத்து நெல்லைப் பெற்றுக் கொண்டனர் என்று இப்புவவரே கூறுகிறார்.

'கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான் தசை சொரிந்த வட்டியும் , ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய

13