பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிறோம். இளஞ்சேரல் இரும்பொறை தன்னைப் பாடிய பெருங்குன்றூர் கிழார்க்கு முப்பத்திராபிரம் காணம் பரிசாகக் கொடுத்தான் என்பதை 9 ஆம் பத்துப் பாயிரத் தினால் அறிகிறோம்.

பட்டினப்பாலை பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணணார்க்குச் சோழன் கரிகாலன் நூருயிரங்காணம் பரிசு வழங்கினான், இவ்வாறு, காணம் என்னும் பொற்காசு அக்காலத்தில் வழங்கி வந்ததை அறிகிறோம். செங்கம் என்னும் ஊரில் (தொண்டைநாடு), ஈயக் காசுகள் வழங்கி வந்ததை அங்கிருந்து கிடைத்த பழக் காசுகளிலிருந்து அறிகிறோம். அந்த ஈயக் காசுகளில் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருப்பதனால் அவை கடைச்சங்க காலத்தில் கி.பி. இரண்டாம் நூற்றாண்டுக்கு முன்பு வழங்கி வந்தவை என்பது தெரிகிறது. அந்தக் காசில் உள்ள எழுத்துக்கள் தேய்ந்து உருத் தெரியாமல் மழுங்கிப் போனமையால் அவ்வெழுத்துக் களின் வாசகத்தை அறிய முடியவில்லை. இந்தச் சான்றுகள் எல்லாம் அக் காலத்தில் காசு வழங்கி வந்தது என்பதைச் சந்தேகம் இல்லாமல் தெரிவிக்கின்றன.

இந்தக் காசுகள் அல்லாமல், அக்காலத்தில் கடல் கடந்த கப்பல் வாணிகத்தின் மூலமாக உரோம (யவன) தேசத்து நாணயங்கள் தமிழ் நாட்டில் வழங்கி வந்தன. அக்காசுகள் சமீப காலத்தில் ஏராளமாகப் புதையல்களிலிருந்து கிடைத்துள்ளன. அந்தக் காசுகளைப் பற்றிப் பின்னர்க் கூறுவோம்.

21