பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோவேறு கழுதை, அஃதாவது குதிரையில் ஒரு சாதி' என்று உரை எழுதியுள்ளார். பழைய அரும்பத உரையாசிரியர், "இராச வாகனமாகிய அத்திரி" என்று உரை எழுதியுள்ளார்; ஆகவே அத்திரி அக்காலத்தில் உயர்தர ஊர்தியாகக் கருதப்பட்டது என்று தெரிகிறது.

குதிரை

குதிரை வெளிநாடுகளிலிருந்து வந்ததையும், அவை போர்க்களங்களில் பயன்படுத்தப்பட்டன என்பதையும் கூறினோம். அவை வண்டியிழுக்கவும் பயன்பட்டன. குதிரை வண்டிகள் தேர் என்று கூறப்பட்டன, குதிரை வண்டிகளைச் சங்க நூல்கள் கூறுகின்றன; சிறுபாணாற்றுப் படை குதிரை வண்டியைக் கூறுகிறது (சிறுபாண், 251-261), புலவர் உலோச்சனார், ஒருவர் குதிரை வண்டியில் வந்ததைக் கூறுகிறார் (அகம், 400: 9-16). அளக்கர்ஞாழார் மகனார் மள்ளனார் தம்முடைய செய்யுள்களில் குதிரை வண்டிகளைக் கூறுகிறார் (அகம், 244: 12-13., 344: 7-11., 314: 8-10). மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் தம்முடைய செய்யுளில் குதிரை வண்டியைக் கூறுகிறார் (அகம், 334: 11-15). மருதன் இளநாகனாரும் நான்கு குதிரை பூட்டிய வண்டியைக் கூறுகிறார் (அகம், 104-3). மாங்குடி மருதனாரும் (குறும், 173: 1-3) புல்லாளங் கண்ணியாரும் (அகம், 154:11-13) மருங்கூர் கிழார் பெருங் கண்ணனாரும் (அகம், 80: 8-13) அரிசில் கிழாரும் (புறம், 146:11) இடைக் காடனாரும் (அகம், 194: 17-91) குதிரை வண்டிகளைத் தம்முடைய செய்யுட்களில் குறிப்பிடுகிறார்கள். ஆனால், அக்குதிரை வண்டிகள் வாணிகப் பொருள்களை ஏற்றிச் செல்லும் சரக்கு வண்டிகளாகப் பயன்படுத்தப்படவில்லை.

மாடும் மாட்டு வண்டியும்

வாணிகப் பொருள்களைக் கொண்டு போவதற்கு எருதுகள் பயன்பட்டன. மாட்டு வண்டிகளில் வாணிகப் பண்டங் களை ஏற்றிக் கொண்டு போனார்கள். வாணிகர் பலர் ஒன்றாகச் சேர்ந்து பொருள்களை வண்டிகளில் ஏற்றிக் கொண்டு போனார்

24