பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எட்டிப் பட்டம்

வாணிகத் துறையில் இவ்வளவு துன்பங்கள் இருந்தும் அக்காலத்துத் தமிழ் வாணிகர், வாணிகத் தொழிலை அயல் நாடுகளோடு தரை வழியாகவும் கடல் வழியாகவும் சென்று நடத்திப் பொருள் ஈட்டினார்கள். 'திரை கடல் ஓடியம் திரவியம் தேடு' என்பது தமிழர் வாக்கு. சேர சோழ பாண்டி யராகிய தமிழரசர் வாணிகரை ஊக்கினார்கள். வாணிகத்தில் பெருஞ் செல்வத்தை ஈட்டின சாத்துவர்களுக்கும் மாநாய்கர் (மாநாவிகர்) களுக்கும் எட்டிப் பட்டமும் எட்டிப் பூவும் அளித்துச் சிறப்புச் செய்தார்கள். எட்டிப்பூ என்பது பொன்னால் செய்யப்பட்ட தங்கப் பதக்கம் போன்ற அணி. பெரும் பொருள் ஈட்டிய வாணிகச் செல்வர்களுக்கு எட்டிப் பட்டம் அளிக்கும்போது இப்பொற் பூவையும் அரசர் அளித்தனர். எட்டிப் பட்டம் பெற்ற வாணிகரைப் பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன.

காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த சாயலன் என்னும் வாணிகன் எட்டிப்பட்டம் பெற்றிருந்ததைச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

'எட்டி சாயலன் இருந்தோன் தனது
பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையில்'

(அடைக்கலக் காதை, 163-164)

குறிப்பு: எட்டி சாயலன் என்போன் ஒரு வாணிகன். எட்டி --- பட்டப் பெயர் என்று பழைய அரும்பத உரையாசிரியர் எழுதுகிறார்.

எட்டிப் பட்டம் பெற்றிருந்த ஒரு வாணிகனை மணிமேகலை காவியங் கூறுகிறது (நாலாம் காதை, வரி 58, 64.). காவிரிப்பூம்பட்டினத்தில் இருந்த தருமதத்தன் என்னும் வாணிகன் பாண்டி நாட்டு மதுரைக்குப்போய் அங்கு வாணிகஞ் செய்து பெரும் பொருளைச் சேர்ந்தான் , பாண்டிய அரசன் அவனுக்கு எட்டிப் பட்டமும் எட்டிப்

47