பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரபியர் வாங்கிக் கொண்டுபோய் வெளிநாடுகளில் விற்றார்கள் . தூரக் கிழக்கு நாடுகளில் உண்டான பொருள்களை மேற்கு நாடுகள் வாங்கிக் கொண்டு போவதற்கும் தமிழ் நாடு அக்காலத்தில் பத்திய வாணிக இடமாக அமைந்திருந்தது.

யவன வாணிகர்

கிரேக்க நாட்டாரும் உரோம் நாட்டாரும் அக்காலத்தில் யவனர் என்று சிறப்புப் பெயர் பெற்றிருந்தார்கள். உரோம் சாய்ராச்சிய காலத்தில், கி.மு., முதலாம் நூற்றாண்டில், எகிப்து தேசத்தை உரோமர் கைப்பற்றிக் கொண்டார்கள். அக்காலத்தில் எகிப்து நாட்டில் மத்திய தரைக் கடல் ஓரத்திலிருந்த அலக்சாந்திரியத் துறைமுகப்பட்டினம், ஆசியா-ஐரோப்பாக் கண்டங்களின் மத்தியத் துறைமுகப் பட்டினமாக இருந்தது. அலக்சாந்திரியத் துறைமுகப் பட் டினத்தில், உலகத்தின் பல பாகங்களிலிருந்து பலநாட்டு வாணிகர் வந்தனர். ரோமாபுரியிலிருந்து யவன வாணிகர் அங்கு வந்து தங்கி வாணிகஞ் செய்தார்கள், உரோமர் எகிப்து நாட்டைக் கைப்பற்றின பிறகு அவர்கள் அரபியரின் வாணிகத்தையும் கைப்பற்றினார்கள். அரபியர் வாணிகஞ் செய்திருந்த செங்கடல் துறைமுகப் பட்டினங்களைக் கைப்பற்றி அரபியரின் வாணிக ஆதிக்கத்தை ஒழித்தார்கள். செங்கடல் வாணிகத்தைக் கைப்பற்றின யவனர், செங்கடலைக் சுடந்து வந்து ஆப்பிரிக்கா கண்டத்தின் கிழக்குக் கரைப் பட்டினங்களிலும், பாரசீகக் குடாக் கடலிலும் கப்பலில் சென்று வாணிகஞ் செய்தார்கள். யவனர் செங்கடலுக்கு இட்ட பெயர் எரித்ரைக்கடல் (Mauris erythraei) என்பது. எரித்ரை என்னும் கிரேக்க மொழிச் சொல்லுக்குச் செங்கடல் என்பது பொருள் . பாரசீகக்குடாக் கடலில் வந்து வாணிகஞ் செய்தபோது அந்தக் குடாக்கடலுக்கும் எரித்ரைக் கடல் என்று பெயரிட்டனர். அக்காலத்தில் அவர்கள் நடுக்கடலில் கப்பல் பிரயாணஞ் செய்யாமல் கரையோரமாகவே பிரயாணஞ் செய்தார்கள். சில காலஞ்சென்ற பிறகு யவனர் பாரசீகக் கடலிலிருந்து சிந்து, கச்சு, குஜராத்தி நாடு

51