பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நாட்டுக்கே வடக்கே) இருந்த பேர்போன துறைமுகங்கள் தமிலிப்தியும் கலிங்கப் பட்டினமும் ஆகும். தமிலிப்தி என்பது அக்காலத்தில் உலகப் புகழ்பெற்ற பெரிய துறைமுகம் . அது கங்கையாறு கடலில் கலக்கிற இடத்தில் வங்காள தேசத்தில் இருத்தது. அதற்குத் தெற்கே கலிங்க தேசத்தில் கலிங்கப்பட்டினத்தில் ஒரு துறைமுகப் பட்டினம் இருந்தது. இந்தத் துறைமுகப் பட்டினங்களுக்கு இடையே வேறு சில துறைமுகப் பட்டினங்களும் அக்காலத்தில் இருந்திருக்கக் கூடும். அவற்றைப் பற்றி இப்போது நமக்குத் தெரியவில்லை .

அக்காலத்துத் தமிழகத்தின் துறைமுகப் பட்டினங்களைக் கூறுவோம்.

கிழக்குக்கரைத் துறைமுகங்கள்

தமிழகத்தின் கிழக்குக் கரையிலிருந்த பழங்காலத் துறைமுகப் பட்டினங்களைக் கூறுவோம். இவை குணகடலில் (வங்காளக் குடாக்கடலில்) இருந்தவை. அந்தத் துறை முகப்பட்டினங்கள் பிற்காலத்தில் மறைந்துபோய் விட்டன. (வேறு புதிய துறைமுகங்கள் ஏற்பட்டுள்ளன.) பழைய துறைமுகப் பட்டினங்களைப் பற்றிப் பழங்கால இலக்கிய நூல்களிலிருந்து அறிகிறோம். தழிழ் நாட்டின் கிழக்குக் கரைத் துறைமுகங்கள் கொல்லத் துறை, எயிற் பட்டினம் (சோபட்டினம்), அரிக்கமேடு, காவிரிப்பூம் பட்டினம், தொண்டி, மருங்கை, கொற்கை என்பவை, தமிழ்நாட்டுக்கு அருகிலுள்ள இலங்கைத் தீவுடன் அக்காலத்தில் தமிழர் வாணிகம் செய்தபடியால் அங்கிருந்த முக்கியத் துறைமுகப் பட்டினங்களையும் இங்குக் கூறுவோம்: அவை மணியல்லவம் (ஜம்பு கொலப்பட்டினம்), திருக்கே தீச்சரம் என்பவை.

தமிழகத்தின் தெற்கே கன்னியாகுமரியில் குமரித் துறை முகம் இருந்தது. இந்தத் துறைமுகங்களை விளக்கிக் கூறுவோம்.

கொல்லத் துறை

கொல்லத்துறை என்னும் துறைமுகப் பட்டினம் வட பெண்ணையாற்றின் தென்கரையில் அந்த ஆறு கடலில் கலக்

64