பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தப் புதையல் அக்காலத்தில் யவன வாணிகர் இங்கு வந்து வாணிகஞ் செய்ததைத் தெரிவிக்கிறது.[1]

தொல் பொருள் ஆய்வாளர் அரிக்கமேட்டை அகழ்ந்து பார்த்துக் கண்டுபிடித்ததுபோல், கொல்லத் துறையான இவ்விடத்தையும் அகழ்ந்து பார்த்தால் இங்கும். பழைய பொருள்கள் கிடைக்கக்கூடும், கிடைக்கும் பொருள்களிலிருந்து வரலாற்றுச் செய்திகளை அறிய இயலும். இது வரையில் இங்கு அகழ்வாராய்ச்சி நடக்கவில்லை, தொல் பொருள் ஆய்வாளர் இனியேனும் இந்த இடத்தை அகழ்ந்து ஆராய வேண்டும்.

எயிற் பட்டினம் (சோ பட்டினம்)

சங்க காலத்திலே தொண்டை நாட்டில் முக்கியத் துறைமுகப் பாட்டினமாக இருந்தது எயிற்பட்டினம், இதற்குச் சோ பட்டினம் என்றும் பெயர் இருந்தது. எயில் என்றும் சோ என்றாலும் மதில் என்பது பொருள். இந்தத் துறை முகப்பட்டினத்தைச் சூழ்ந்து மதில் இருந்தபடியால் இப்பெயர் பெற்றது. இது பிற்காலத்தில் மரக்காணம் என்று பெயர் பெற்றது. பெரிப்ளூஸ் என்னும் கிரேக்க மொழி நூல் இந்தப் பட்டினத்தைச் 'சோ பட்மா' என்று கூறுகிறது. சோ பட்மா என்பது சோ பட்டினம் என்பதன் மரூஉ.

இடைகழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் தாம் பாடிய சிறுபாணாற்றுப் படையில் இந்தப் பட்டினத்தைக் குறிப் பிடுகிறார். “மணிநீர் வைப்பு மதிலொடு பெயரிய, பனி நீர்ப் படுவிற் பட்டினம் (சிறுபாண், 152-153) என்று கூறுகிறார்.

'ஒங்கு நிலை யொட்டகம் துயில் மடிந்தன்ன
வீங்கு திரை கொணர்ந்த விரைமா லிறகு'

என்று (சிறுபாண், 154-155). இவர் கூறியபடியால் விரை மரம் (அகில் கட்டை ) இங்கு இறக்குமதியான பொருள்களில் ஒன்று என்று தெரிகிறது. இந்த விரை பரம், கடலில்


  1. Hoard of Roman Coins in a Pot. Latest record of Coin of Antonius Piu (S. A. D. 161) Asiatic Researches, II. (1970, pp, 331-32.

67