பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அரிக்கமேடு துறைமுகப் பண்டகசாலை கி.பி. முதல் நூற்றாண்டில் இருந்தது என்பதற்கு மற்றொரு சான்று அங்குக் கிடைத்த மட்பாண்ட ஓட்டில் எழுதியுள்ள பிராமி எழுத்துகள். தமிழ் நாட்டில் செய்யப்பட்ட அக்காலத்து மட்பாண்டங்களின் உடைந்த ஓடுகள் அங்குக் கிடைத்தன. அவ்வோடுகளில் சிலவற்றின் மேல் பிராமி எழுத்து எழுதப்பட்டுள்ளன. பிராமி எழுத்துக்கள் கடைச்சங்க காலத்தில் கி.மு. மூன்றாம் நூற்முண்டிலிருந்து கி.பி. 2 ஆம் நூற் றாண்டு வரையில் வழங்கி வந்தன. அரிக்கமேட்டில் கிடைத்த பானையோடுகளில் பிராமி எழுத்து எழுதப்பட்டிருப்பதனால் அவை கி.பி. முதல் நூற்றாண்டில் செய்யப்பட்ட பானைகள் என்பது தெரிகின்றது. இவ்வாறு, அரிக்கமேடு கி.பி. முதல் நாற்றண்டிலிருந்த துறைமுகப் பண்டகசாலை என்பதற்குச் சான்றுகள் காணப்படுகின்றன. இது பற்றி விரிவாக அறிய விரும்புவோர், 'ஏன்ஷியென்ட், இந்தியா' என்னும் வெளியீட்டின் இரண்டாவது எண்ணில் (பக்கம் 17 முதல் 124) கண்டு கொள்க.[1]

காவிரிப்பூம் பட்டினம்

சங்க காலத்திலே சோழ நாட்டில் காவிரியாறு கடலில் கலக்கிற புகர்முகத்தில் இருந்த காவிரிப்பூம் பட்டினம் அக்காலத்திலே உலகப்புகழ் பெற்றிருந்தது. காவிரிப்பூம் பட்டினத்துக்குப் புகார் என்னும் பெயர் உண்டு. பழய பௌத்த மத நூல்களில் இது கவிரபட்டனம் என்று பெயர் கூறப்படுகிறது. காகந்தி என்றும் இதற்கு ஒரு பழைய பெயர் உண்டு. கி.பி. முதல் இரண்டு நூற்றாண்டுகளில் உரோமாபுரியிலிருந்து யவன் வணிகர் இங்கு வந்து வாணிகம் செய்தார்கள். தூரக் கிழக்கிலிருந்தும் (சாவக நாட்டி லிருந்தும்) வட இந்தியாவிலிருந்தும் கப்பல் வாணிகர் இங்கு வந்து வாணிகம் செய்தார்கள். சோழ நாட்டுக் கப்பல் வாணிகர் இந்தத் துறைமுகத்திலிருந்து புறப்பட்டு சாவக நாடு, காழகம், கங்கைத் துறைமுகம் முதலான இடங்களுக்


  1. Arikamedu: 'An Indo-Roman Trading-station on the east Coast of India.' PP. 17-124. Ancient India. Number 2. July 1946.

72