பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வந்த பட்டுகளைத் தமிழ் நாட்டு வாணிகர் அங்கிருந்து கொண்டு வந்து தமிழ் நாட்டில் விற்றார்கள், தமிழ் நாட்டிலிருந்து பட்டுத் துணியை மேல்நாட்டு வாணிகர் வாங்கிக் கொண்டு போய் மேற்கு நாடுகளில் விற்றார்கள்.

ஆரம்

ஆரம் என்பது சந்தனம். சந்தன மரம் தமிழ் நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலை (சய்ய மலை)களிலும் உண்டாயிற்று. ஆனால் இந்தச் சந்தனத்தைவிட சாவக நாட்டுச் சந்தனம் தரத்திலும் மணத்திலும் உயர்ந்தது. அது வெண்ணிறமாக இருந்தது. அகிற்கட்டையைப் போலவே சந்தனக் கட்டையும் சாவக நாட்டிலிருந்து அக்காலத்தில் இங்கு இறக்குமதியாயிற்று.

வாசம்

வாசம் என்பது வாசனைப் பொருள்கள், அவை கிராம்பு (இலவங்கம்), குங்குமப்பூ , தக்கோலம், சாதிக்காய் முதலியவை. இந்த வாசப் பொருள்கள் அக்காலத்தில் சாவக நாட்டில் மட்டும் உண்டாயின ; வேறெங்கும் இவை அக்காலத்தில் கிடைக்கவில்லை.

கருப்பூரம்

கருப்பூரம் என்பது சாவக நாட்டில் சில இடங்களில் உண்டான ஒருவகை மரத்தின் பிசின், கருப்பூரத்தில் பல வகையுண்டு. ஆகையினால் இது 'தொடு கருப்பூரம்' என்று கூறப்பட்டது. கருப்பூர வகைக்குப் பளிதம், என்றும் பெயர் உண்டு. ஒருவகைப் பளிதம் தாம்பூலத்துடன் அருந்தப்பட்டது. அது மணமுள்ளது, விலையுயர்ந்தது.

கிழக்குக் கடற் கோடியில் கடல் கடந்த சாவக நாட்டுத் தீவுகளில் உண்டான இந்தப் பொருள்கள் தொண்டித் துறை முகத்தில் இறக்குமதியானதைச் சிலப்பதிகாரம் கூறுவதிலிருத்து அறிகிறோம். தொண்டித் துறைமுகத்தைப் பற்றி நாம் அறிவது இவ்வளவு தான்.

82