பக்கம்:பழங்காலத் தமிழர் வாணிகம்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மருங்கூர்ப் பட்டினத்துக்கு மேற்கே அதைச் சார்ந்து ஊணூர் என்னும் ஊர் இருந்தது. ஊனூர் மதில் அரண் உடையதாக இருந்தது.

"கடிமதில் வரைப்பின் ஊணூர் உம்பர்
விழு நிதி துஞ்சும் வீறுபெறு திருநகர்
இருங்கழிப் படப்டை மருங்கூர்ப் பட்டினம்"

(அகம், 227: 18-20)

ஊணூரைச் சூழ்ந்து நெல்வயல்கள் இருந்தன. ' முழங்கு கடல் ஓதம் காலைச் சொட்கும் பழம்பல் நெல்லின் ஊணூர்' என்று மருதன் இளநாகனார் (அகம், 220) கூறுகிறார்.

சோழ நாட்டிருந்த பேர்போன காவிரிப்பூம் பட்டினத்தின் துறைமுகப் பகுதி மருவூர்ப்பாக்கம் என்றும் நார்ப்பகுதி பட்டினப்பாக்கம் என்றும் இருகூறாகப் பிரிந்திருந்தது போல இவ்வூரும் மருங்கூர்ப் பட்டினம் ஊணூர் என்று இரு கூறாகப் பிரிந்திருந்தன. காவிரிப்பூம் பட்டினத்தின் பட்டினப்

பாக்கம் மதிலையும் அகழியையும் கொண்டிருந்தது போல ஊணூரும் மதில் சூழ்ந்திருந்தது.

84