பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


மரத்தினாலேயே கட்டப்பட்டன. தில்லைக் கோவிலில் உள்ள ஊர்த்துவதாண்டவ மூர்த்தி கோயில், முதலில் மரத்தினாலேயே அமைக்கப்பட்டிருந்தது. பிற்காலத்தில் தான் கருங்கல்லுக்கு மாற்றப்பட்டது. மரக்கூரை, தூண்கள், கெட்டுப் போகாத வண்ணமே செம்பிலும், தங்கத்திலும் தகடுகள் வேயப்பட்டன.31

செங்கற்கோயில்கள்

பின்பு மரக்கோயில்களில் தீப்பற்றி அழிய நேரும் அபாயம் உணரப்பட்ட பின் - செங்கல் (சுடுமண்) சுண்ணாம்பு (சுதை) கொண்டு பெரும்பகுதி கட்டி உத்தரம் கதவு முதலியவற்றுக்கு மட்டுமே மரங்களைப் பயன்படுத்தும் வழக்கம் ஏற்பட்டது. கி.பி. 600க்கு முற்பட்ட தமிழ் நாட்டுக் கோயில்கள் யாவும் செங்கற் கட்டடங்களே என்பார் மயிலை சீனி வேங்கடசாமி. 32<\sup>

சங்க காலத்துத் தமிழ்க் கோயில்கள் பெரும்பாலும் இத்தகையவையே என்று கூறுவதற்குப் போதிய சான்றுகள் உள்ளன. இதற்கு எட்டுத் தொகையில் ஒன்றாகிய அகநானூற்றில் பெரும்புலவர் கடியலூர் உருத்திரங். கண்ணனார் பாடியுள்ள ஒரு பகுதி சான்றாக அமையும்.

இட்டிகை நெடுஞ்சுவர் விட்டம் வீழ்ந்தென .
மணிப்புறாத் துறந்த மரஞ்சோர் மாடத்து
எழுதணி கடவுள் போகலிற் புல்லென்று
ஒழுகுபலி மறந்த மெழுகாப் புன்றிணை 33<\sup>

பாழடைந்த கோயில் ஒன்றைப் பற்றிய வருணனையாக வரும் இதனுள், "செங்கல்லால் இயன்ற நெடிய சுவரிற் சேர்த்திய விட்டம் என்னும் மரம் அசைந்து வீழ்ந்து பட்டதனால் அங்கு ஏற்கெனவே இருந்த மணிபுப்றாக்கள் கைவிட்டுப் போன நழுவி வீழ்தலையுடைய மாடத்தின் கண் ஓவிய வடிவாக எழுதி ஊர்மக்கள் வழிப்பட்ட கடவுள் போய்விட்டதனால் பொலிவிழந்து மக்களால் வழிபடப்