பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


திருநறையூரில் (இன்றைய நாச்சியார் கோயில்) சோழன் செங்கணான் கட்டிய மணிமாடக்கோயில் ஒன்றும் 'திருவைகல்’ என்னும் தலத்தில் ஒரு மணிமாடக் கோயில் இருந்ததாகவும் (திருவைகல் மாடக் கோயில்) தெரிகிறது.43

மாமல்லபுரத்து அருச்சுனன் இரதம் தருமராசர் இரதம் ஆகியவையும் மாடக் கோயில்கள் போன்ற அமைப்பினவே. 44

காஞ்சி பரமேசுவர விண்ணகரம் என்னும் வைகுந்தப் பெருமாள் கோயிலும் கி.பி. 730 முதல் 795 வரை ஆண்ட நந்தி வர்ம பல்லவன் கட்டிய உத்தரமேரூர் மாடக் கோயிலும் குறிப்பிடத்தக்கவை. இதுவும் மூன்று நிலைகளுள்ள மாடக் கோயிலே.45

மூவகைப் பிரிவுகள்

பாரத நாட்டுக் கட்டடக் கலையை மூவகையாகப் பிரித்துக் காணலாம். அம்மூன்று பெரும்பிரிவுகளும் நிலவியல் வழிபாட்டுமுறை சார்ந்தவை.

1. நாகரம், 2. வேசரம், 3. திராவிடம்.
(அ) நாகரம் என்பது வடஇந்தியக் கட்டட மரபு ஆகும்.
(ஆ) வேசரம் என்பது பெளத்த மதத்தவர் சார்பான கட்டடக்கலை.
(இ) திராவிடம் தென்னிந்தியக் கோயிற் கட்டடக் கலையாகும்.46

நாகரக் கட்டடக் கலை நருமதை ஆற்றுக்கு வடக்கே வட இந்தியாவில் அமைந்தது. அடி முதல் முடிவரை நான்கு பட்டை (சதுரமாக) இருக்கும். இம்முறை தமிழகத்தில் இல்லை.

வேசரம் - பெளத்த விகாரங்களும், அரைவட்டவடிவ பகோடாக்களும், தேங்காய் மூடியைக் கவிழ்த்ததுபோன்ற