பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

117


காலத்தில் மன்னர்கள் தங்கிய மாடத்திற்கு இளவேனிற் பள்ளி என்று பெயரிட்டிருந்தனர்.99

பூம்புகார் நகரில் அரண்மனை மண்டபம் கட்டுவதற்கு யவன நாட்டுத் தச்சரும் துணை செய்திருக்கின்றனர். எனவே அயல்நாட்டு நிபுணரைக் கலந்து செயல்படும் வழக்கமும் இருந்தமை தெளிவாகிறது.

இராசராசன் கட்டிய தஞ்சைக் கோபுரத்தின் உயரம் 216 அடி. அப்படியானால் இதன் கடைக்கால் அளவு எத்துணை ஆழமும் அகலமும் உள்ளதாயிருந்திருத்தல் வேண்டும்? கோபுரத்தின் உச்சியில் அமைந்துள்ள ஒரே கல் மட்டும் இருபத்தைந்தரை அடிச் சதுரம் உடையது. இதன் எடை இன்றைய அளவுமுறைப்படி எண்பது டன். இதற்குப் 'பிரமந்திரதளக்கல்’ என்று பெயர். பாரம் தூக்கி மேலே ஏற்றி வைக்கக்கூடிய புதிய எந்திரங்கள் எவையும் இன்றுபோல இல்லாத காலத்தில் இவ்வளவு பெரிய கல்லை எவ்வாறு 216அடி உயரத்திற்கு ஏற்றினர் என்பது எண்ணி வியத்தற்குரியது.

மணலைக் குவித்துச் சாரமேடு அமைத்து யானைகளின் உதவியால் தள்ளிப் பிரமந்திரதளக்கல்லைக் கோபுரத்தின்மேல் ஏற்றியதாகத் தெரிகிறது. இதற்கு ஆதாரமான சாரப் பள்ளம் ஊர் தஞ்சைக்கு அருகே உள்ளது. 100

அணைகள் கட்டி நீரைத் தேக்கும் பொறியியலிலும் தமிழர்கள் திறம் பெற்றிருந்தனர். சோழன் கரிகாற் பெருவளத்தான் காவிரிக்குக் கரை எடுத்த பெருமையும், கல்லணை கட்டிய சிறப்பும் நீர்ப்பாசனப் பொறியியல் கட்டடக் கலையியலின் அழியாச் சின்னங்களாக விளங்குகின்றன.101

உயர்ந்த மண் அணையினால் அமைக்கப்பட்ட வீரானம் என்னும் வீர நாராயணம் ஏரி, செம்பரம்பாக்கம் ஏரி,காவேரிப்பாக்கம் ஏரி,இராசசிங்க மங்கலம் ஏரி முதலிய

ப-8