பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

125


கி. பி. 8-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலே வாழ்ந்த தண்டி என்னும் வடமொழி நூலாசிரியர் தாம் இயற்றிய அவந்தி சுந்தரிகதா என்னும் நூலில் புகழ்பெற்ற லலிதா லயர் என்னும் சிற்பியைப் பற்றிக் கூறுகிறார். அத்துடன் மட்டும் இல்லாமல் ‘சூத்ரக சரிதம், என்னும் கதையை லலிதாலயரே தமிழில் எழுதினார் என்ற தகவலும் தண்டியாசிரியரால் கூறப்படுகிறது. 3

இரண்டாவது விக்கிரமாதித்யன் (783-745) காஞ்சிபுரத்தை வென்ற பிறகு அந்நகரிலிருந்து குண்டன் என்னும் பெயரையுடைய சிற்பி ஒருவனை அழைத்துக் கொண்டு வந்து பட்டதக்கல்’ என்னும் ஊரில் ஒரு கோயிலைக் கட்டினான் என்பது தெரிகிறது. அந்தக் கோயில். இப்போது விருயாட்ச ஈசுவரர் கோயில் என வழங்கப்படு கிறது. திரிபுவனாசார்யர் அநிவாரிதாசாரியார் என்ற சிறப்புப் பெயர்களை இவ்வரசன் இந்தச் சிற்பிக்கு அளித்திருக்கிறான்.4

முதலாவது குலோத்துங்க சோழன் காலத்தில் புரிசையில், திருப்படக்காருடைய மகாதேவர் கோயில் கட்டப்பட்டது. இதனைக் கட்டிய சிற்பாசாரியின் பெயர். ‘சந்திர சேகரன் ரவி’ என்னும் சோழேந்திர சிம்ம. ஆசாரி என வழங்கப்படுகிறது. 5

இராசேந்திர சோழன் காலத்தில் புதுப்பிக்கப்பட்ட திருவோற்றியூர் மூலக் கோயில் இன்ன சிற்பியால் புதுப் பிக்கப்பட்டது என்பது தெரிய வாய்ப்புச் சுவர் எழுத்துக்கள் மூலம் அறிய முடிகிறது. வீர சோழ தச்சன் என்பதே அப்பெயர்.6

சிதம்பரம் கோயிலின் வடக்குக் கோபுரத்தைக் கட்டிய சிற்பியரின் உருவங்களும், பெயர்களும் வடக்குக் கோபுரத்து உள்சுவரில் எழுதப்பட்டுள்ளன.