பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

12

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


மதுரை தவிரப் பட்டத்துக்கு வருமுன் பாண்டிய இளவரசர்கள் வசித்த நகரம் கொற்கை எனக் கூறப்பம் டாலும் - அழிந்து பட்ட கடற்கரை நகரம் - முத்துக் குளித்தலில் புகழ் பெற்றிருந்தது என்பன போன்ற சில குறிப்புக்களைத் தவிரக் கொற்கை நகரமைப்புப் பற்றியும் அதிகமாக அறிய முடியவில்லை.

இலக்கியப் புகழ் பெற்ற திருவாரூர், தில்லை, திருவரங்கம் முதலிய நகரங்களைப் பற்றியும் நகரமைப்பு என்ற முறையில் குறைவான ஆராய்ச்சிக் குறிப்புக்களே கிடைக்கின்றன.

இக்காரணங்களால் புகார், கூடல் இரு நகரங்களை முழுமையாக ஆராய்ந்தால் கிடைக்கும் செய்திகளைக் கொண்டே நகரமைப்புத் திறனில் தமிழர் பெற்றிருந்த சிறப்பை முழுமையாக விளக்கிவிட இயலும். பழந்தமிழ் நகரங்கள் எல்லா நலன்களும் வளங்களும் நிறைந்தவையாயிருந்தன என்பதற்கு அதன் பரியாயமான சொல் ஒன்றே விளக்கமாயமையும். “வசதி” என்றொரு சொல் இன்றும் நல நிறைவுகளைத் தொகுத்துரைக்கும் தனியொரு பதமாக வழங்கி வருவது கண்கூடு. வசதி என்ற சொல்லுக்கே-நல்லிடம், ஊர், வீடு என்று பொருள்கள் உள்ளமை சூடாமணி நிகண்டில் காணலாம்.7

“வசதி நல்லிடமூர் வீடாம் வரனயன் பரமன் காந்தன்”

என்னும் விளக்கம் கூறுகிறது. இச்சொற் பொருளிலிருந்து பழந்தமிழர் ஊரமைப்பும், கட்டடக் கலையும் எத்துணை நலமாகவும், சீராகவும் இருந்தன . என்பதை உணர முடிகிறது. நகரும், வீடும் வசதி'யா விருந்ததனையே உணர முடிகிறது.

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா என்னும் கலைக் களஞ்சிய நூலில் கட்டடக் கலை என்ற பகுதியில்