பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



செய்யத் துவர் வரி வளை பொருத்தல் முதலிய நிலக் குற்றங்கள் நீங்கின இடத்திலே நலந்தெரிந்து இவ்விடம் என்று வகுத்துக் கொண்டு” 20 என்றார்.

அடியார்க்கு நல்லாரோ அரங்கமைத்தலை மேலும் விவரிக்கும்போது, “தந்திர வழி அரங்கு இவ்வுலகத்துச் செய்யுமிடத்துத் தெய்வத் தானமும் பள்ளியும் அந்தணரிருக்கையும் கூபமும், குளனும் காவும் முதலாகவுடையன நீங்கி அழியாத இயல்பினையுடைத்தாய் நிறுக்கப்பட்ட குழிப் பூழி குழிக் கொத்துக் கல்லப்பட்ட மண் நாற்றமும் மதுர நாறி இரதமும் மதுரமாகித் தானும் திண்ணிதாய் என்பும், உமியும், பரலும் சேர்ந்த நிலம், களித்தரை, உவர்த்தரை, ஈளைத்தரை, பொல்லாச் சாம்பல் தரை, பொடித்தரை என்று சொல்லப்பட்டன ஒழிந்து ஊரின் நடுவணதாகித் தேரோடும் வீதிகளெதிர் முகமாக்கிக் கொள்ளல் வேண்டும் என்க"21 என்று விவரிக்கிறார்.

இவ்விடத்தில் சாமிநாதையர் ஒர் அடிக்குறிப்புப் பாடல் தருகிறார்.

ஆடலும் பாடலும் கொட்டும் பாணியும் நாடிய
அரங்கு சமைக்கும் காலைத் தேவர் குழாமுஞ் செபித்த
பள்ளியும் புள்ளின் சேக்கையும் புற்றும் நீங்கிப்
போர்க்களி யானைப் புரைசாராது மாவின் பந்தியொடு
மயங்கல் செய்யாது செருப்புகு மிடமும் சேரியும் நீங்கி
நுண்மை யுணர்ந்த திண்மைத்தாகி மதுரச்சுவை மிகூஉ
மதுர நாறித் தீராமாட்சி நிலத்தொடு பொருந்திய
இத்திறத்தாகு மரங்கினுக் கிடமே22

என்று வரும் அப்பாடல். அரங்கமைக்க நிலங்கோடல் பற்றி விளக்குகிறார் அடியார்க்கு நல்லார். -

நிலந்தான்,