பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



ஆனால் சிலப்பதிகாரக் காலத்து அரங்கமைப்பிலேயே அந்நிலை இருப்பதைக் காண முடிகிறது. இந்நுணுக்கம் தமிழர் கட்டடக் கலை நயத்திற்கு ஓர்அடையாளமாகவே விளங்குகிறது.

இவ்வாறு அமைத்த அரங்கிலே அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்னும் நால்வகை வருணத்தார்க்குமுரிய பூதங்களை எழுதி யாவரும் வணங்க மேனிலத்தில் வைப்பர்.

இதே கருத்து சீவக சிந்தாமணியிலும் கூறப்படுகிறது.25

சிலம்பு அழற்படுகாதையிலும் இப்பூதங்கள் பற்றிய பிற விவரங்கள் வருகின்றன.

அரங்கி னுயரமு மகலமு நீளமும் பொருந்த நாடி
உரைக்குங் காலைப் பெருந்தண் மால்வரைச் சிறுகழை
கண்ணில், கண்ணிடை யொருசாண் வளர்ந்தது கொண்டே
இருபத்து நால்விரற் கோலளவு அதனால் எழுகோலலெத்
தெண்கோ னீளத் தொருகோல் உயரத் துறுப்பினதாகி
உத்தரப் பலகையோ டரங்கின் பலகைவைத்த
இடைநிலை நாற்கோலாகப் பூதரை
எழுதி மேனிலை வைத்து நந்தி என்னுந் தெய்வமு
மமைத்துத் தூணிழற் புறப்பட மாண்விளக் கெடுத்து
...கோவும் யானையுங் குரங்கும் பிச்சனும்
பாவையும் பாங்குடைப்புருடா மிருகமும் யானையு மெழுதி