பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

13

கட்டடங்களின் பயன் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது.” 8

1. வீடுகள் (Domestic)
2. சமயச்சார்பான கட்டடங்கள் (Religiosu)
3. அரசாங்கக் கட்டடங்கள் (Governmental)
4. கேளிக்கைக் கட்டடங்கள் (Recreational)
5. நலவுரிமைக்கும் கல்விக்குமான கட்டடங்கள்(Welfare)
6. வர்த்தகக் கட்டடங்கள் (Educational)
7. தொழிலகக் கட்டடங்கள் (Industrial)

கட்டடத்திற்குத் திட்டமிடுதல் பற்றிக் கூறும்போது,

1. சூழ்நிலை கருதித் திட்டமிடல் 2. பயன்பாடு கருதித் திட்டமிடல் 3.பொருளாதாரத் திட்டமிடல் என மூவகையாகப் பகுக்கப்படுகிறது.

கற்கட்டடம்,மரக்கட்டடம், இரும்புக்கட்டடம், உருக்குக் கட்டடம், சிமெண்டுக் கலவைக் கட்டடம் எனக் கட்டட வகைகள் பகுத்துரைக்கப்படுகின்றன. இங்கே நம் நாட்டுக் கட்டடக்கலையில் சிமெண்டு வருவதற்கு முந்திய காலத்துக்கு ஏற்பக் காரை, சுதை, (திவாகரம்) சுண்ணாம்பு என நாம் சேர்த்துக் கொள்ளவேண்டும். பின்னாளில் சுண்ணாம்பின் இடத்தைச் சிமெண்டு பிடித்துக் கொண்டது. கட்டடக் கலையின் தத்துவம் பற்றியும் ‘என்ஸைக்ளோபீடியா பிரிட்டானிகா என்னும் கலைக் களஞ்சிய நூல் பின்வருமாறு கூறுகிறது. 9

“கட்டடக் கலைக் கோட்பாடு உண்மையில் ‘ரேஷியோ சினேஷியோ’ என்னும் இலத்தீன் மொழித் தொடரின் ஏற்கப்பட்ட இணக்கமான மொழிபெயர்ப்பாக விர்ட் ரூவியஸ் என்னும் புகழ் பெற்ற உரோமானியக் கட்டடக் கலை நிபுணரால் கி.பி.முதல் நூற்றாண்டிலேயே