பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

157


அமைந்திருந்தது. அதற்கு நாளங்காடி என்று பெயர். அல்லங்காடி என மற்றொரு பகுதியும் இருந்திருக்கிறது. இது சோலை சூழ்ந்த பகுதியாம்.

காவிரிப்பூம்பட்டினத்தின் முழுப் பகுதியும் இம்முன்று பெரிய பிரிவுகளுக்குள் அடங்கி விடும்.

மருவூர்ப்பாக்கம்

இனி மருவூர்ப்பாக்கத்தில் அடங்கிய பகுதிகள் என்னென்ன என்று கவனிக்கவேண்டும். இவ்விவரங்கள் இளங்கோ அடிகள் வாக்காகவே இந்திர விழவூரெடுத்த காதையில்7 வருகின்றன.

அலைநீராடை மலைமுலை யாகத்
தாரப் பேரியாற்று மாரிக் கூந்தற்
கண்ணகன் பரப்பின் மண்ணக மடந்தை
புதையிருட் படாஅம் போக நீக்கி
உதைய மால்வரை உச்சித் தோன்றி
உலகு விளங்கவிரொளி மலர்கதிர் பரப்பி
வேயா மாடமும் வியன்கல இருக்கையும்
மான்கட் காலதர் மாளிகை இடங்களும்
கயவாய் மருங்கிற் காண்போர்த் தடுக்கும்
பயனற வறியா யவனர் இருக்கையும்
கலந்தரு திருவிற் புலம்பெயர் மாக்கள்
கலந்திருந் துறையும் இலங்குநீர் வரைப்பும்8

நிலா முற்றங்களும், மிகவும் சிறப்புடைய பலவகை அலங்காரங்களால் அழகு செய்யப்பட்ட அறைகளும், மானின் கண் போன்ற அமைப்பை உடைய காற்றுப் புகும்வழிகளாகிய சாளரங்களும்,கொண்ட மாளிகைகள் நகரின் மருவூர்ப்பாக்கத்தில் நிறைய இருந்தன. காவிரி கடலொடு கலக்கும் இடங்களில் கரையோரமாக யவனர் மாளிகைகள் இருந்தன. அந்த மாளிகைகள் கண்ணைக் கவரும் எழில் வண்ணம் கொண்டவையாக விளங்கின. குன்றாத