பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்



தோட்டங்கள், நீர் நிலைகள், இளமரக்காக்கள் ஆகியவற்றுக்கும் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.29

பூம்புகார் நகரிலும் இவ்வமைப்பு இருந்திருப்பதைக் காண முடிகிறது.

நாளங்காடிச் சோலை, காவிரி நீர்ப் பெருக்கு இவை தவிரவும் நீர்நிலைகள், வனங்கள், சோலைகள் ஆகியனவும் பூம்புகாரில் இருந்துள்ளன.

வனங்கள்

காவிரிப்பூம்பட்டின நகரத்தில் இருந்த சில பெரிய வனங்களைக் குறிப்பிட்டுக் கூறியுள்ளார் இளங்கோ அடிகள். மணிமேகலையிலும் இவை பற்றி வருகின்றன30. அவையாவன:

  1. மலர் வனம் (இலவந்திகைச் சோலை)
  2. உய்யான வனம்
  3. சம்பாதி வனம்
  4. கவேர வனம்
  5. உவ வனம்31

தானே தண்ணீரை நிரப்பிக் கொள்ளவும், அத்தண்ணீரை வெளியேற்றவும் வல்ல இயந்திர அமைப்புடைய, நீர் வாவியைக் கொண்ட மலர் வனம் ஒன்று பூம்புகாரில் இருந்தது. அம்மலர் வனம் அரசர்க்கும், அமைச்சர்க்கும் உரியதாயிருந்தது. இதற்கே இலவந்திகைச் சோலை என்றும் பெயர் வழங்கியது.32 வேனிற் காலத்தில் அரசன் தன் பரிவாரங்களுடன் தங்கியிருத்தற்கு ஏற்ற வண்ணம் குளிர்ந்த நிழலும், நீர்நிலையும் கொண்டு சுற்றிலும் மதிலாற் சூழப் பெற்றுள்ள காவற் சோலையாயிருந்தது இது.