பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல் ஏழு

மதுரை நகரம்


பாண்டியர் தலைநகரமாயிருந்த மதுரை நகரின் அமைப்புத் தாமரைப் பூவின் அமைப்போடு ஒப்பிடப்பட்டுள்ளது. கட்டடக்கலை நகரமைப்பு முதலியவற்றை விவரிக்கும் மயமத நூலில் பத்மம் (தாமரை) என்பது நகரமைப்பு வகைகளுள் ஒன்றாகக் கூறப்பட்டுள்ளது.1 மதுரை நகருக்கும் அவ்விலக்கணம் பொருந்துகிறது.

சங்கத் தொகை நூல்களுள் ஒன்றாகிய பரிபாடல்,

மதுரை நகரமானது திருமாலின் உந்தியின் அலர்ந்த தாமரை மலரை ஒக்கும்.

அந்த நகரத்துள்ள தெருக்கள் அம்மலரின் இதழ்களை ஒக்கும்.

பாண்டிய மன்னனது அரண்மனை, அம்மலரின் நடுவில் உள்ள பொகுட்டை ஒக்கும்.

அந்நகரில் வாழும் தமிழ்க் குடிமக்கள் அத்தாமரை மலரின் தாதுக்களை ஒப்பர்.

அந்நகரைத் தேடி வரும் பரிசில் வாழ்நர் தாதுண்ண வரும் வண்டுகளை ஒப்பர். மதுரை நகர மாந்தர் மறை முழக்கத்தின் ஒலி கேட்டு நாள்தோறும் துயிலெழுவரே யன்றி மற்றைய வஞ்சி நகரத்தாரும், உறையூராரும்

ப–12