பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

183



இருந்தன.3 அப்பெருங் கடம்பவனப் பரப்பின் கீழ்ப்பகுதியில் மணலூர் என்னும் ஊர் ஒன்று இருந்தது. இந்த மணலூரைக் கோநகராகக் கொண்டு குலசேகர பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நாட்டை ஆண்டு வந்தான்.4

அக்காலத்தில் மணலூரில் இருந்த தனஞ்சயன் என்னும் வணிகன் சிறந்த சிவபக்தன். ஒருமுறை அவன் தன்னுடைய வாணிப நிமித்தம் மேற்கு நோக்கிப் பயணம் செய்து கொண்டிருந்தவன், பகல் கழிந்து இரவு வந்த காரணத்தால், கடம்ப வனத்துக்குள் தங்கினான்.5

அவ்வாறு அவன் தங்கிய இடத்திற்கு அருகே ஓர் அரிய காட்சியைக் கண்டான். எட்டுப் பெரிய யானைகளால் தாங்கப் பெற்ற விமானத்தின் அடியில், ஒளி ஞாயிறு போல் விளங்கும் சிவலிங்கம் ஒன்றைக் கண்டு வியந்தான் தனஞ்சயன். அவன் மனம் மகிழ்ந்து பக்திப் பரவசம் கொண்டான்.6

அன்று சோமவாரம் (திங்கட்கிழமை) அங்கே தேவர்கள் வழிபட வந்தனர். இர்வின் நான்கு யாமத்தும் மலர் தூவி வழிபட்டார்கள் அவர்கள். தனஞ்சயனும் சென்று வழிபட்டான். கடைசி யாமத்திற்குப்பின் விடிகாலையில், தேவர்களைக் காணாமல் வியப்புடன் மதுரை திரும்பிய தனஞ்சயன், அரண்மனைக்குச் சென்று பாண்டிய மன்னனிடம் இச்செய்தியைத் தெரிவித்தான்.7 தனஞ்சயன் கூறிய செய்திகளைக் கேட்டு மன்னன் வியப்படைந்து, மேலே என்ன செய்வதென்று ஒன்றும் புரியாதிருந்த நிலையில், சிவபெருமான் ஒரு சித்தர் வடிவில் மன்னனின் கனவில் தோன்றி,

“கடம்ப வனத்திலுள்ள காட்டை அழித்து, நகரமாகக் செய்வாயாக" என்று பணித்தார். விடிந்ததும், அரசன் முந்திய இரவு தான் கனவில் கண்டவற்றைத் தன் அமைச்சர்களிடமும், சான்றோர்களிடமும் கூறி அவர்களையும் அழைத்துக்கொண்டு கடம்பவனத்திற்குச் சென்றான்.8