பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

198

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


பலவகைப் பிரிவுகள்

தொழில் பிரிவு-செயற் பிரிவுப்படியே தெருக்கள் தனித் தனியே அமைந்திருந்தன.

‘பரத்தையர் தெரு, வேளாளர் தெரு, வணிகர் தெரு, மன்னர் மறுகு, மறையவர் தெரு எனப் பல்வேறு தெருக்கள் மதுரை மாநகரில் அமைந்திருந்தன. இத் தெருக்கள் ஒவ்வொன்றும் எவ்வாறு அமைந்திருந்தன என்று தனித்தனியே விவரிக்கப்பட்டிருக்கின்றன”. 61

வணிகர் விதிகள்

மதுரை நகரமைப்பில் வணிகர் வாழும் கடை வீதிகள் பற்றிச் சிறப்பித்துக் கூறப்பட்டுள்ளது. வணிகர் கடை வீதிகளில் உள்ள திண்ணைகள் நீல மணிகளால் ஒளி பெற்று விளங்கின. சுவர்கள் பணிங்கின் ஒளியை உமிழ்ந்தன. தூண்கள் வயிரத்தால் செய்யப் பெற்றிருந்தன. அத்துரண்களில் இடையிடையே முத்துத் தாமங்கள் நிரல் படத் தொடுத்துத் தொங்கவிடப்பட்டிருந்தன. கருநிறக் கம்பளம் வேய்ந்த சட்டத்தின் மேல் வரிசை வரிசையாகப் பவளமாலைகளும் முத்து மாலைகளும் பொன் மாலைகளும், தொங்கவிடப்பட்டன. அவை கண்கொள்ளாக் காட்சிகளாய்த் தோன்றின. 62

“வணிகர்களுடைய கடைவீதிகள் இரவு என்றும் பகல் என்றும் பகுப்பற்ற விண்ணுலகம் போல விளங்கின. வணிகச் சிறுமியர் வைத்து விளையாடும் அம்மிகளும், குளவிகளும் மரகதத்தால் உரல்களும், உலக்கைகள் வயிரத்தாலும், அடுப்புகள் வெள்ளியாலும் செய்யப்பட்டிருந்தன.

வெள்ளி அடுப்பில் வாசனை மிக்க அகிற் கட்டைகள் விறகாகப் பயன்பட்டன.

அங்கே விளையாடும் வணிகச் சிறுவர்கள் பனிநீரை உலை நீராகவும் முத்துக்களை அரிசியாகவும், மாணிக்