பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


பிறரும் அந்தி அங்காடியில் நிரம்பியிருந்துள்ளனர். 74 அவர்கள் ஆரவாரம், அறிஞர் பெருமக்களின் தருக்க ஆரவாரம் போல ஒலித்தது.

இனி நாளங்காடி பற்றி,

மழை கொளக் குறையாது புனல்புக மிகாது
கரைபொரு திரங்கு முந்நீர் போலக்
கொளக் கொளக் குறையாது தரத்தர மிகாது
கழுநீர் கொண்ட எழுநா ளந்தி
ஆடுதுவன்று விழவின் நாடார்த் தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்
நாளங்காடி நனந்தலைக் கம்பலை

என்று மதுரைக்காஞ்சி விவரித்துக் கூறுகிறது.75

அறக்கூழ்ச் சாலை

ஏழை எளியவர்க்கு வயிறார உணவிடும் அறக்கூழ்ச் சாலைக்கும் மதுரை நகரமைப்பில் இடம் தரப்பட்டிருக்கிறது.76

அத்தகைய அறக்கூழ்ச் சாலையில் பலா, வாழை முந்திரி முதலிய பழங்களும், பாகற்காய், வாழைக்காய், வழுதுனங்காய் முதலிய காய்களும், கீரைகளும், இறைச்சி கலந்த அடிசிலும், கிழங்கு வகைகளும், பாலும் வறியவர்க்கு வழங்கப்பட்டிருப்பது தெரிகிறது என்று மதுரைக் காஞ்சி இந்த அறக்கூழ்ச்சாலையைப்பற்றிக் கூறுகிறது.77 நகரில் அவ்வப்போது வந்து போகும் மக்களுக்கு (Floating Population) இவ்வுணர்வு அறம் பயன்பட்டிருக்கிறது.

நகரத்தின் காவல் ஏற்பாடு

மதுரை நகரத்தில் காவல் ஏற்பாடு உறுதியாகவும் உரமாகவும் செய்யப்பட்டிருந்தது. காவலர் நள்ளிரவிலும் கண்ணுறங்காமல் காவல் புரிந்து வந்தனர். அஞ்சா