பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

207


பரிபாடல் நூலுள் அகப்படாமல் எஞ்சிய பாடல்களிலிருந்து தொகுக்கப்பட்ட திரட்டுப் பகுதியில் மதுரை நகர் பற்றி வருவன குறிப்பிடத் தக்கவையாகும். பரிபாடல் உலகனைத்துமே மதுரை நகருக்கு ஈடாகாது என்கிறது. திருமகளின் திலகம்போல் அமைந்த நகரம் என்கிறது மற்றொரு பாடல்.

உலகம் ஒருநிறையாக தானோர் நிறையாப்
புலவர் புலக்கோலால் தூக்க - உலகெலாம்
தான்வாட வாடாத தன்மைத்தே தென்னவன்
நான் மாடக்கூட னகர் 95
செய்யாட் கிழைத்த திலகம்போற் சீர்க்கொப்ப
வையம் விளங்கிப் புகழ்பூத்த லல்லது
பொய்யாத லுண்டோ மதுரை புனைதேரான்
வையை யுண்டாகு மளவு 100

மதுரை நகரின் அமைப்பு கார்த்திகை மகளிரின் காதில் இடப்பட்ட மகர குண்டலம் போலிருந்தது என்கிறது மற்றொரு பரிபாடல். கார்த்திகை மகளிர் அக்கினியின் மனைவியே அறுவகை அழகிய வடிவாக மாறிய பெண்கள்.101

கார்த்திகை காதிற் கனமகர குண்டலம் போற்
சீர்த்து விளங்கித் திருப்பூத்தல் அல்லது கோரத்தை
உண்டாமோ மதுரை கொடித்தேரான் வார்த்தை
யுண்டாகு மளவு 102

பேரழகியான அங்கியின் மனைவி காதில் குண்டலம் போல் என ஒப்பிட்டது மதுரையின் நகரமைப்புக்குப் பெரிய புகழாரமாகும். சங்கமிருந்து தமிழாய்ந்த நகரமாக இருந்த காரணத்தால் பூம்புகாரைவிட மதுரைக்கு அறிவாளர் நகரமாக அமைந்த (Intellectual city) பெருமையும் கிடைக்கிறது. கடைச்சங்கமும் அதன்