பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

215



காட்டப்பட்டிருக்கும் பாட்டு ஒன்றில் காஞ்சிநகரம் தோகை விரித்தாடும் மயிலுடைய தோற்றத்திற்கு ஒப்பிடப் பட்டுள்ளது.3

நகரமைப்பில் தாமரை வடிவ நகரமைப்பிற்கு (பத்மம்) மதுரை உதாரணமாயமைந்தது போல மயில் வடிவ (மயூர் பாணி) நகரமைப்பிற்குக் காஞ்சி உதாரணமாக விளங்கி இருக்க வேண்டும். பாரவி என்ற வடமொழிக் கவிஞர் “ஆண்களில் அழகர் திருமால்,பெண்களில் அழகி அரம்பை, நகரங்களில் அழகியது காஞ்சி எனச் சிறப்பித்துக் கூறி -யிருக்கிறார்.

மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்முள்
ஒலியும் பெருமையும் ஒக்கும்-மலிதேரான்
கச்சி படுவ கடல் படா கச்சி
கடல் படுவ எல்லாம் படும்.4

என்னும் தண்டியலங்கார மேற்கோள் பாட்டும் காஞ்சி நகரின் பல்வேறு வளங்களைக் கடலினும் மேலானதாகக் கூறுகிறது.

"காஞ்சி நகரின் இருபாலமைந்திருந்த ஏரிகள் இரண்டும் இருபுறத் தோகைகளாகவும், கோட்டை மதில் வயிறாகவும், பீலி கடிகையாகவும், நீர்வண்ணன் அத்தியூரை வாயாகவும் உடைய காஞ்சி அழகிய மயில் போன்ற தோற்றமுடையது” என்பது தண்டியலங்கார உருவக மேற்கோள் பாட்டு ஆகும். இதில் கடிகை என்பது காஞ்சியில் இருந்த கல்லூரியைக் குறிக்கும்.5

மணிமேகலை காஞ்சியை அடைந்தது பற்றிக் கூறும் போது தேவர்கோனின் 'காவல் நகரமே பூமிக்கு வந்தது போல' எனச் சாத்தனார் கூறுகிறார்.6 மணிமேகலை சென்று தொழும் சேதியும் கூறப்படுகிறது.7 மதில், பொழில் கூறப்படுகிறது.

காஞ்சி நகரில் அரசன் ஒரு தெய்வத்தின் ஆணைப்படி தான் அமைத்த பீடிகையையும், சோலையையும் மணிமேக