பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்


இதனுடன் பொருந்தி வருகிறது. எனவே பேரியாற்றடை கரையிலுள்ள இதுவே பழங்கால வஞ்சியாயிருக்க வேண் டும் என ஆய்வாளர் முடிவு செய்கின்றனர்.34 மணிமேகலை வஞ்சி மாநகரத்திற்குச் சென்றது பற்றி மணிமேகலைக் காப்பியத்தில் வருகிறது.

தேவ குலமும் தெற்றியும் பள்ளியும்
பூமலர்ப் பொழிலும் பொய்கையும் மிடைந்து
நற்றவ முனிவரும் கற்றடங்கினரும்
நன்னெறி காணிய தொன்னூற் புலவரும்
எங்கணும் விளங்கிய் எயிற்புற இருக்கையில் 35

என்று வஞ்சி மாநகரின் மதிலுக்கு வெளியே இருந்த புறஞ்சேரிப் பகுதி விவரிக்கப்பட்டுள்ளது. வேதிகை எனப்படும் திண்ணைகளும், அமரும் மேடைகளும், வஞ்சி மாநகரத்தின் சிறப்பாக அமைந்திருந்திருப்பது தெரிகிறது.

பூவா வஞ்சி

பூக்களில் வஞ்சிப்பூ என ஒன்று உண்டாகையினால் சேரர் கோநகரமாகிய வஞ்சியை அப்பொருளிலிருந்து விலக்கிக் கூறப் பூவா வஞ்சி36 என்று கூறும் வழக்கம் இருந்தது. வஞ்சி மாநகரைப் பொன்னகர்37என்கிறார் சாத்தனார். பொற்கொடியின் (கொடி-வஞ்சி) பெயரையுடைய பொன்னகர் என அவர் கூறுவதிலிருந்து அக் கோ நகரின் பொலிவை உணர முடிகிறது.

அறச்செல்வி மணிமேகலை வஞ்சி மாநகரின் உட்பகுதியில் புகுந்து பல தெருக்களையும் வீதிகளையும் கடந்தாள் எனச் சாத்தனார் விவரிக்கிறார். உயரமான இடத்திலிருந்து வீழும் அருவிகள் தாழ்கின்ற செய்குன்றங்களையும், மிக்க ஆர்வத்தைப் பெருகச் செய்யும் நறுமண மலர்ச் சோலைகளும் தேவர்கள் தங்களுக்குரிய விண்ணுலகத்தையும் மறந்து வந்து தங்குவதற்கு விரும்பும் நல்ல நீர் வளமுள்ள இடங்களும், சாலைகளும் பிறவும் இருந்துள்ளன38. வஞ்சியில் பெளத்தப் பள்ளி இருந்தது39 என்றும்