பக்கம்:பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பும்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இயல் ஒன்பது
நகரமைப்பில் சமுதாயங்கள்

தமிழ்க் காப்பியங்களிலும், இலக்கியங்களிலும் புலவர்கள் பாடியிருக்கிற பழந்தமிழர் நகரமைப்பு முறையில் எந்தெந்தச் சமுதாயங்கள் எபபடி எப்படி, எங்கு எங்கு வாழ்ந்தன என்பதை ஒரளவு அறிய முடிகிறது. கோயிலை அல்லது அரசனின் அரண்மனையை மையமாக வைத்து நகரமைப்பை வருணிக்கும் நூல்களில் எந்தெந்தச் சமுதாய மக்கள், எந்தெந்தத் தெருக்களில், எப்படி வாழ்ந்தார்கள் என விவரிக்கப்படுவதை ஓர் ஆய்வுக் கண்ணோட்டத்தில் காண முயலலாம்.

ஒரு நாட்டின் எல்லா மக்களும், எல்லா இடங்களிலும் இணைந்து கலந்து வாழும் இன்றைய சமத்துவச் சமுதாய அமைப்போடு ஒப்பிடாமல் அன்றைய முடியாட்சி முறையில் சமுதாயங்கள் அமைந்திருந்த பாங்கை மட்டும் ஆராய்வதே பொருந்துவதாகும். காவிரிப்பூம்பட்டினம், மதுரை முதலிய கோநகரங்களைப் பற்றிய குறிப்புகள் இந்த ஆராய்ச்சிக்குப் பயன்படக் கூடும். சிலம்பு காட்டும் பூம்புகார் நகரமைப்பை முதலில் காணலாம். -

பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்1
குலத்திற் குன்றாக் கொழுங்குடிச் செல்வர்2

என்று பூம்புகார் நகரில் வெளிநாடுகள் சென்று வாணிபஞ் செய்யும் 'கடலோடிகள்' உண்டென்றும், பெருத்த செல்வர்கள் உண்டென்றும், கோவலன் கண்ணகியின்